வெள்ளி, 26 அக்டோபர், 2018

wheat halwa /godhumai halwa/ஈஸி கோதுமை அல்வா- diwali recipes

                       கோதுமை அல்வா

       

தேவையான பொருட்கள் :

  1. கோதுமை மாவு        - 1 கப்
  2. சீனி                                - 1 1 / 2 கப்
  3. நெய்                               - 1 கப்
  4. தண்ணீர்                       - தேவைகேற்ப
  5. ஏலக்காய் பொடி       - 1 / 2  டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு         - 1 டேபிள்ஸ்பூன்  

செய்முறை: 

  • கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  • 5 நிமிடங்கள் கழித்து கோதுமை மாவை மெதுவாக பிழிந்து கோதுமை பால் எடுக்கவும்.மீண்டும்மீண்டும் தண்ணீர் சேர்த்து கோதுமை பால் எடுக்க வேண்டும் 
  • எடுத்து வைத்த கோதுமை பாலை ஜல்லடையில் வடித்து தெளிய விடவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் கோதுமை பாலை சேர்த்து கை விடாமல் கிளறவும்
  • 1 கப் அளவு சர்க்கரையை  கோதுமை பால் நன்றாக வெந்த பிறகு சேர்த்து கிளறவும்
  • மற்றொரு பாத்திரத்தில் 1 / 2 கப் சீனியையும் 1 டேபிள்ஸ்பூன்  நெய்யையும் சேர்த்து கேரமல் செய்துகொள்ளவும்
  • செய்த கேரமலை  அல்வாவில் சேர்த்து கிளறவும்
  • நெய்யை சிறிது சிறிதாக அல்வாவில் சேர்க்கவும்
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிபருப்பை வறுத்து அல்வாவில் சேர்த்து கிளறவும்
  • அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது வேறு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக