ஹாய் friends வாழ்வோம் வளமுடன்,
நான் ரேவதிசிவகுமார் .இன்னைக்கு நாம சுர்மா கல்ல பத்தி பாக்க போறோம்.எனக்கு கண்வலி வந்தப்போ என்னோட friend ஆயிஷா இந்தக்கல்ல யூஸ்பண்ணி கண்மை போட சொன்னாங்க . அதுல இருந்து நான் இத தான் யூஸ் பண்றேன்.கண்வலியும் சரியாச்சு இமைகளும் அடர்த்தியா ஆனதால தலைக்கும் யூஸ்பண்ணி பார்த்தேன் .ரொம்ப நல்ல ரிசல்டு கிடைச்சது. இந்த சுர்மா கல்ல எகிப்தில் இருக்கிற சினாய் மலையிலிருந்து வெட்டி எடுக்குறாங்க.அரபிக் ல இத "இமித்"அப்டின்னு சொல்றாங்க .இந்த சுர்மா கல்ல பத்தின நல்ல விஷயங்களை இப்போ பாப்போம் .
பயன்கள் :
- சுர்மா கல்ல யூஸ்பண்ணி கண்ணுக்கு மை தீட்டும் போது கண் நல்லா குளிர்ச்சியாகும்
- கண் ல ஏற்படும் நோயிகளை சரியாக்கும்
- இமைகள் அடர்த்தியாகும்
- சுர்மா கல்லோடு விட்டமின் ஈ மாத்திரை சேர்த்து புருவ முடிகள் ல தடவிட்டு வந்தால் புருவமுடி அடர்த்தியாகும்
- 2 ௦ ௦ மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய்யோட விட்டமின் ஈ மாத்திரை 2 சேர்த்து கூடவே சுர்மா கல்லையும் உரசி சேர்த்து கலக்கி தலைக்கு தேச்சா தலைமுடி கருப்பாவும்,அடர்த்தியாவும்,நீளமாவும் வளரும்
- நீங்க சுர்மா கல்ல யூஸ் பண்ண ஆரம்பிச்சா கண்திருஷ்ட்டில இருந்து தப்பிக்கலாம்
- குழந்தைகளுக்கு கட்டாயம் இத யூஸ் பண்ணி பொட்டு வச்சா திருஷ்டி படாம ரொம்பவே ஆரோக்கியமா இருப்பாங்க
- இந்த சுர்மா கல் வீட்ல இருந்தாலே நெகடிவ் எனர்ஜி இருக்காது.
- கண்மை வேற சுர்மாகல் வேற
- சுர்மா பொடி கடைகள்ல வாசனையோட கிடைக்குது,
- ஆனால் சில சுர்மா பொடிகள் ல இரும்பு தூள்கள் கலக்குறாங்க
- ஒருவேள நீங்க சுர்மா பொடி வாங்குனா ப்ளீஸ் காந்தம் வச்சு செக் பண்ணிக்கோங்க.
- சுர்மா கல்லா வாங்குறது பெஸ்ட்.நாட்டு மருந்து கடைகள் ல கிடைக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக