பாசி பருப்பு பாயசம்
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 1 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 3 தேக்கரண்டி
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
பச்சை கற்பூரம் - கடுகு அளவு
செய்முறை:
ஒரு தேக்கரண்டி நெய்யை அடி கனமான பாத்திரத்தில் விட்டு பாசி பருப்பை வறுத்து தட்டில் எடுத்துக்கொள்ளவும்.பின்பு அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும்1 கப் தண்ணீரையும் பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் வெல்லத்தை போடவும் .முந்திரி பருப்பையும் ,உலர் திராட்சையையும் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும் .சரியான பதம் வந்ததும் ஏலக்காய் பொடி,பச்சை கற்பூரம் சேர்த்து பாயாசத்தை இறக்கவும் .இப்போது சுவையான பாசி பருப்பு பாயாசம் தயார்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக