ரவாலட்டு
தேவையானபொருட்கள்:
- ரவை - 1 கப்
- சீனி - 3/4 கப்
- நெய் - 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- முந்திரிபருப்பு - 1/2 கப்
- ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- ரவையை வெறும் பாத்திரத்தில் இட்டு வறுத்துக்கொள்ளவும்.
- பின்பு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சின்னஞ்சிறு துண்டுக்களாக்கி வறுத்துக்கொள்ளவும்.
- மீண்டும் 1 டீஸ்பூன்நெய் சேர்த்து தேங்காய் துருவலையும் வறுத்துக்கொள்ளவும்.
- ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையையும் சீனியையும் ஒன்றாக மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
- மீதி உள்ள நெய்யை சூடாக்கி சீனி கலந்த ரவையில் ஊற்றி ஏலக்காய்பொடி,வறுத்த தேங்காய் துருவல்,வறுத்து வைத்த முந்திரி பருப்பு என அனைத்தையும் கலந்து சூடாக இருக்கும் போதே லட்டு பிடிக்கவும்.
- சூப்பரான ரவாலட்டு தயார்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக