சனி, 21 ஏப்ரல், 2018

பீட்சா சாஸ்




























ஹாய் Friends வாழ்வோம் வளமுடன் ,

                                       நான் ரேவதிசிவகுமார்.இன்னைக்கு பீட்சா சாஸ் எப்பிடி பண்றதுன்னு பாக்கலாம்.வீட்டுல பீட்சா பண்றவங்களுக்கு தெரியும் ,இது பீட்சாவுக்கு எவ்ளோ முக்கியம்னு ,கடைகள்ல இது கிடைச்சாலும் வீட்ல இத செய்யும்போது காரம் உப்பு புளிப்பு நமக்கு பிடிச்சமாதிரி சேர்த்து செய்யலாம் .அதிகமா செஞ்சு fridge ல வச்சு use பண்றதவிட சட்னி மாதிரி தேவைக்கு அப்பவே செஞ்சி use பண்ணலாம். நாம எவ்ளோதான் ஹெல்தியா,டேஸ்ட்டியா சமையல் பண்ணினாலும் ,பசங்களுக்கு பீட்சாவும்,பர்கரும் பிடிக்கத்தான் செய்யுது,ஸோ கடைகள்ல வாங்கி தர்ரதவிட வீட்லயே எப்போவாவது ரெடி பண்ணி கொடுக்கலாம் 



தேவையான பொருட்கள்:



  1. தக்காளி                                   - 4
  2. பூண்டு                                      - 3 பல் 
  3. ஆர்கேனோ                            - 1/2 டீஸ்பூன்
  4. உப்பு                                           - தேவைக்கேற்ப
  5. மிளகு தூள்                              - தேவைக்கேற்ப
  6. சிவப்பு மிளகாய் தூள்           - தேவைக்கேற்ப
  7. கெட்சப்                                        - தேவைக்கேற்ப
  8. ஆலிவ் ஆயில்                         - 2 டீஸ்பூன்
 செய்முறை  

  • ஒரு frying  pan ல 2 டீஸ்பூன் ஆலிவ்வாயில் சேர்த்து வெள்ளை  பூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கணும் 

  • தக்காளிய நல்ல கழுவிட்டு மிக்சில அரச்சு வடிகட்டி frying  pan ல சேர்க்கணும்.

  • stove -வ சிம்மில் வைத்து சமைக்கணும்.

  • தக்காளி வதங்கினதுக்கு அப்புறம் மிளகாய்த்தூள், மிளகுதூள்,உப்பு, ஆர்கேனோ சேர்த்து மூடி 5 நிமிஷம் வைக்கணும்.

  • கடைசியா தேவைக்கு கெட்சப் சேர்த்து stove -வ off பண்ணனும்.

  • இப்போ பீட்சா சாஸ் ரெடி .

பீட்சா க்கு பேஸ் மிக்ஸ் பண்ணி வச்சிட்டு, அந்த  சேம் டைம்ல நாம பீசா சாஸ் ரெடி பண்ணிரலாம் .

                                                                      நன்றி


                                வாழ்வோம் வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக