ஹாய் friends ,வாழ்வோம் வளமுடன்,
போன பதிவுல பீட்சா சாஸ் செய்றது எப்டின்னு பார்த்தோம். இப்போ பீட்சா எப்டி பண்றதுன்னு பாக்கலாம்.இது ரொம்பவே ஈஸியா... யார்வேண்னாலும் பண்ணலாம் .இது basic தான் நீங்க டாப்பிங் சிக்கன்,பன்னீர்,கார்ன், பெப்ரோனி ,வெஜிஸ் சேர்த்து கூட பண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
- மைதா - 1 கப்
- ட்ரை ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- சீனி - 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய குடை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
- நறுக்கியதக்காளி - 1 டேபிள்ஸ்பூன்
- ஆலிவ் - 3 டீஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
- வெந்நீர் -1/2 கப்
- மோசறேல்லா சீஸ் - 1/2 கப்
செய்முறை :
- லேசான வெந்நீர்ல 1/2 டீஸ்பூன் சீனி சேர்த்து, கலக்கி, ஈஸ்ட் சேக்கணும்.
- வெந்நீர் அதிக சூடா இருந்தா ஈஸ்ட் எல்லாமே செத்துபோயிடும்,அப்புறம் பீட்சா நல்லாவே இருக்காது.அதனால கவனமா செய்யுங்க .
- இப்போ சீனியும் ஈஸ்ட்டும் சேர்ந்தது வெந்நீர் மேல ரியாக்ட் ஆகியிருக்கும் .
- அப்போதான் மைதாவும் உப்பும் சேர்க்கணும்.
- நல்ல மிக்ஸ் பண்ணி சப்பாத்தி மாவு போல பிசையணும்.வேணும்னா தண்ணீ சேர்த்துக்கலாம்.
- 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில.,மிக்ஸ் பண்ணின மாவுல சேர்த்து 1/2 மணிநேரம் மூடி வைக்கணும். winter time ல fermentation ஆகுறதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்.
- மாவு பொங்கி டபுள்ஆன பிறகு மறுபடியும் பிசைஞ்சு சப்பாத்தி போல வட்டமா ,ஆனா கொஞ்சம் தடிமனா திரட்டணும் இப்போ பீட்சா பேஸ் ரெடி.
- ஓவன 180 டிகிரீ ல 10 நிமிஷம் ப்ரீஹீட் பண்ணனும்
- பீட்சா பேஸ்ல பீட்சா சாஸ் தடவி,நறுக்கின குடைமிளகாய்,தக்காளி,ஆலிவ் , மோசறேல்லா சீஸ் சேர்த்து ஓவன்ல 35 நிமிஷம் வச்சி எடுத்தா பீட்சா ரெடி.
நீங்க செய்ற பீட்சாவோட சைச வச்சு நேரம் மாறுபடலாம்.ஸோ பார்த்து பண்ணுங்க . இந்த ரெசிபில ஏதாவது சந்தேகம் னா comment பண்ணுங்க.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக