தேவையான பொருட்கள்:
- தயிர் - 1 கப்
- பெரிய வெங்காயம் - 1
- வெள்ளரிக்காய் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- கேரட் துருவல் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
- தக்காளி,வெள்ளரிக்காய்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து சின்னச்சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கி உப்பு சேர்த்து 3 நிமிடம் கலந்து மூடி வைத்தால் வெங்காயம் தண்ணீர் விட்டிருக்கும்.
- தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு அதோடு நறுக்கிய தக்காளி,வெள்ளரிக்காய் கேரட் துருவல்,கொத்தமல்லி தழை,பச்சைமிளகாய் இவற்றுடன் தயிர் கலந்து பரிமாறவும்.
- இது பிரியாணி,தக்காளி சாதம்,புலாவ் வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக