தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- உப்பு - 1/2 டீஸ்பூன்
- நெய் - 1 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- கிராம்பு -3
- பட்டை - சிறியதுண்டு
- ஏலக்காய் - 1
- முந்திரிபருப்பு - 6
- கரம் மசாலா - 2 சிட்டிகை
செய்முறை:
- மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்
- முந்திரிபருப்பை சிறியதுண்டுகளாக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- குக்கரில் மீதி உள்ள நெய்யில் கிராம்பு.பட்டை ,ஏலக்காய்,சீரகம் என ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- அதனுடன் அரிசியை சுத்தமாக கழுவிப் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
- நெய்யில் அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகுதான் உப்பும் 2 கப் தண்ணீரும் .சேர்க்கவேண்டும்.
- மெதுவாக கலந்துவிட்டு 2 சிட்டிகை கரம்மசாலா சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 5 நிமிடம் அல்லது 3 விசில் வைத்து இறக்கி பரிமாறவும்.
- முளைக்க வைத்த பச்சை பயறு கிரேவி,சென்னா மசாலா கிரேவி ,வெஜ் கடாய்,சிக்கன் கிரேவி ,மட்டன் சுக்கா வறுலோடு ரொம்பவும் சூப்பராக இருக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக