திங்கள், 16 ஏப்ரல், 2018

சந்திராஷ்ட்டமம்

சந்திராஷ்ட்டமம் ;


  1. நம்முடைய ராசிக்கு எட்டாவது இடத்திற்கு சந்திரன் வருவது சந்திராஷ்ட்டமமாகும்.
  2. இந்த நாளில் மனக்குழப்பங்கள்,உடல் சோர்வு,வீண் விவாதங்கள்,தேவையற்ற பிரச்சனைகள் நம்மை தேடி வரும்.
  3. சந்திரன் மாத்ரு காரகன் ,எனவே தாய் வழியில் பிரச்சனைகள்,வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  4. உடல் ரீதியான பிரச்சனைகளை விட மனரீதியிலான பிரச்சனைகளே அதிகரிக்கும்.
  5. பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நாள் சந்திராஷ்ட்டமமாக சொல்லப்படுகிறது.
பரிகாரம் :
  1. சந்திராஷ்டமத்தன்று விநாயகர் வழிபாடு செய்வது   அவசியம் .
  2. சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை வழிபடலாம்.
  3. மிகமிக பொறுமையாக இருக்கவேண்டும்,
  4. பால் அல்லது அரிசியினால் செய்த  பதார்த்தங்களை  உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
  5. அன்றைய பொழுதுகளில் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் நடந்துகொள்ளவேண்டும் .
சந்திராஷ்ட்டமத்தை எப்படி தெரிந்துகொள்வது ?
                              
                                  தினமும் காலண்டர்  ல தேதி கிழிக்கும் போது பார்த்தால் தெரியும் .சந்தி -அப்படின்னு போட்டு நட்சத்திரத்தையும் எழுதிருப்பாங்க ,உதரணமா ,




  ஹஸ்த நட்சத்திரத்துக்கும்,சித்திரை நட்சத்திரத்துக்கும் சந்திராஷ்டமம்.  ஸோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டும்.


                                                    நன்றி 

                        வாழ்வோம் வளமுடன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக