கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/2 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
காய்ச்சிய பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 2 ௦ ௦ கிராம்
முந்திரிப்பருப்பு - 3 தேக்கரண்டி
செய்முறை:
* கேரட்டை கழுவி துருவிக்கொள்ளவேண்டும்
* அடி கனமான பாத்திரத்தில் 1 ௦ ௦ கிராம் நெய் விட்டு கேரட்டை
பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
* காய்ச்சிய பாலை வதக்கிய கேரட்டுடன் சேர்த்து வேகவிடவும்
* கேரட் பாலோடு வெந்து திரண்டு வரும்போது சர்க்கரை,ஏலக்காய்
பொடி சேர்க்கவும்.
* 1 0 0 கிராம் நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து கேரட்
அல்வாவோடு சேர்த்து கிளறவும் .
* இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக