அட்சய திருதியை 18-04-2018
- சித்திரை அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் வருவது அட்சய திருதியை.
- திரேதாயுக தொடக்கத்திற்கு அட்சய திருதியையே முதல் நாளாக கிருஷ்ணர் தேர்வு செய்ததாக புராணங்கள் கூறுகிறது .
- கிருஷ்ணர் பரசுராமராக அவதரித்ததும் இதே நாளில் தான்.
- தீர்தங்கரர்களில் ஒருவரான ரிஷப தேவர் நினைவாக இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
- வேத வியாசர் சொல்ல, விநாயகர் மகாபாரதத்தை அட்சய திருதியை நாளில் எழுதியதாக செய்திகள் உண்டு.
- இதே நாளில் கங்கை நதி பூமிக்கு வந்ததாகவும் போற்றப்படுகிறது.
- வங்காளத்தில் "அல்கதா"எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
- வட இந்தியாவில் மஹாலட்சுமி பூஜை .குபேரபூஜை செய்ய ஏற்ற நாளாக கொண்டாட படுகிறது
நாம் செய்ய வேண்டியது:
- மஞ்சள் ,கல் உப்பு,பால்,பால் பொருட்கள்,பச்சரிசி,விசிறி,தானிய வகைகள் வாங்கினால் மிகவும் நல்லது.
- பணமிருந்தால் செல்வத்தின் அடையாளமான தங்கம் ,வெள்ளி பொருட்கள் வாங்கலாம்.(இதை கடன் வங்கி செய்தல் தவறு)
- மாற்றுத்திறனாளிகள்,ஆதரவற்றோர் ,ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவி செய்தால் புண்ணியம் சேரும்.
- வேத பாராயணம்,உபன்யாசகம் செய்ய உகந்தநாள்.
- இந்நாளில் புது நோட்டில் வரவு செலவு கணக்கு எழுத தொடங்க, செல்வம் சேரும் என்பது வட இந்தியர்களின் நம்பிக்கை.
- துடைப்பத்தில் மகாலக்ஷ்மி இருப்பதாக ஐதீகம்.எனவே புது துடைப்பம் வாங்குதல் நலம்.
- பசுவிற்கு வாழை பழம் தருவது சிறப்பு.
- தயிர் அன்னம் தானமாக தந்தால் மிகமிக நல்லது.
- பச்சை கற்பூரம் ,இனிப்பு வகைகள் ,துளசி செடி வீட்டிற்கு வாங்கினால் நல்லது.
சுருக்கமாக சொன்னால் "அட்சய" என்றால் வளர்ச்சி அல்லது குறையாத என்று பொருள்.இந்நாளில் எதை செய்கிறோமோ அதுவே வளரும்.முடிந்த வரை அன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக