தேவையான பொருட்கள்:
- சேமியா - 1 கப்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1/2 டீஸ்பூன்
- நிலக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன் அளவு
- பச்சைமிளகாய் - 2
- கொத்தமல்லி தழை - தேவைகேற்ப
- கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 1/2 கப்
- மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
செய்முறை :
- வெறும் பாத்திரத்தில் சேமியாவை போட்டு நன்றாக சிவக்க வறுத்து தனியாக தட்டில் கொட்டி வைக்கவும்.
- பின்பு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும் .
- மீண்டும் அதே பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து சேர்த்து, கடுகு வெடித்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும்,1 1/2 கப் தண்ணீரை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்க்க வேண்டும்
- தண்ணீர் கொதித்த பிறகு தட்டில் இருக்கும் சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைக்கவேண்டும்.
- உப்புமா வெந்த பிறகு ,சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
- இறுதியாக வறுத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
- விருப்பப்பட்டால் நறுக்கிய கேரட்,பீன்சை வெங்காயத்தோடு வதக்கி செய்யலாம் .
- காரத்திற்கு பச்சைமிளகாய்க்கு பதில் வத்தலோ.வத்தல் பொடியோ, விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம்.
- கரம் மசாலா 1/4 டீஸ்பூன் சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக