தேவையான பொருட்கள்:
தினை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 1 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
பாசி பருப்பு - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
தினையையும்,பாசிபருப்பையும் கழுவி 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும் .1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு காய்ச்சி வடிகட்டி பருப்பு ,தினையுடன் கலக்கவும் .மிதமான சூட்டில் தேங்காய் துருவலை 1 தேக்கரண்டி நெய்யில் வறுத்து சேர்க்கவும். .பின்பு ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கலக்கவும்.அதனுடன் 2 தேக்கரண்டிநெய்யில் முந்திரி ,உலர் திராட்சை வறுத்து நெய்யுடன் கலந்து பரிமாறவும்.மணமணக்கும் தினை பொங்கலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக