நெல்லிக்காய் சாறு
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் 3
இஞ்சி சிறிய துண்டு
இந்துப்பு சுவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
மிதமான வெந்நீர் 3 குவளை (கப்)
செய்முறை:
* நெல்லிகாயை நன்றாக கழுவி கொட்டை நீக்கி,சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ,பின்பு இஞ்சியை தோல் நீக்கி கழுவி எடுத்து கொள்ளவும்,இவற்றுடன் இந்துப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மிக்ஸ்சி ஜாரில் இட்டு அரைத்து எடுக்கவும் ,பின்பு அதனுடன் மிதமான வெந்நீரை சேர்த்து வடிகட்டி அருந்தவும்.
.
நெல்லிக்காய் சாறின் பயன்கள்:
1. கருமையான நீண்ட கூந்தலை பெறலாம்
2.கண் பார்வை தெளிவு பெறும்
3.தேவையற்ற கொழுப்பை கரைக்கும்
4.நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்
5.தொடர்ச்சியாக குடித்து வர தொப்பை குறையும்
6.இரத்தத்தை சுத்திகரிக்கும்
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக