வியாழன், 26 ஏப்ரல், 2018

ஜிகர்தண்டா




ஹாய் Friends,வாழ்வோம் வளமுடன்,

                             நான் ரேவதிசிவகுமார்,இன்னிக்கி ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்டி 

செய்றதுன்னு பாக்கலாம்.Famous ஜிகர்தண்டா மதுரைல ரெம்பவே 

Popular,ஏன்னா அந்த shop ல ஜிகர்த்தண்டாவுக்காகவே சொந்தமா ஐஸ்கிரீம் 

ரெடி பண்ணி சேக்கறாங்க .Famous ஐஸ் கிரீம் நமக்கு கிடைக்காததால நான் 

இன்னைக்கி வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து செஞ்சிருக்கேன்.இது ரெம்பவே 

சூப்பரா இருக்கு .இது எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.



தேவையான பொருள்கள்:

  1. வெண்ணிலா ஐஸ்கிரீம்       -4 டீஸ்பூன்
  2. பாதாம் பிசின்                             -தேவைகேற்ப 
  3. பால்                                               -3 கப் 
  4. சர்பத் சிரப்                                    -3 டீஸ்பூன்   
செய்முறை :
  • பாதாம் பிசின் கல் மாதிரி இருக்கும் ,மூணு கல் அளவு எடுத்தாலே போதும் ,எடுத்த பிசின நல்ல கழுவிட்டு அத ராத்திரி FULLலா, ஒண்ணரை கப்  தண்ணில ஊறவைக்கணும்  ஊறினதுக்கு அப்புறம் நெறையா கிடைக்கும். 
  •    
  • மூணு கப் பால 2 கப் ஆகுறவறைக்கும்,திக்கா காய்ச்சி,ஆறினதுக்கு அப்புறம் பிரிட்ஜ்ல வைக்கணும் 

  • முதல்ல ஒரு கிளாஸ்ல , ஊறின பாதாம் பிசின் தேவையான அளவு ஸ்பூன்ல எடுத்து போடணும்.
  •                            
  • அதுக்கு அப்புறம் அந்த  கிளாஸ்ல ஒரு டீஸ்பூன் சர்பத் சிரப் சேக்கணும்,
  • அடுத்ததா அதுல  வெண்ணிலா ஐஸ்கிரீம் சேக்கணும் 
  • இப்போ பால சேர்க்கணும்.பால சேர்த்ததுக்கு அப்புறமா அது மேல ரெண்டு டீஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்கணும்
  •  அதுக்கு மேல சர்பத் சிரப் ஒரு டீஸ்பூன் சேர்க்கணும்.
  • இப்போ ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி ஆயிடிச்சு.
    




                                               நன்றி 


                                 வாழ்வோம் வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக