மைசூர் பாகு
தேவையான பொருட்கள்:
- கடலைமாவு - 1 கப்
- சீனி - 1 கப்
- நெய் -2 கப்
- தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
- கடலைமாவை மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.
- பின் 1 கப் நெய் சேர்த்து கடலைமாவை கரைத்துக்கொள்ளவும்.
- அடிகனமான பாத்திரத்தில் சீனியும் தண்ணீரும் சேர்த்து பாகு காய்ச்சவும்.
- கம்பி பதம் வந்ததும் கரைத்து வைத்த கடலைமாவை ஊற்றி கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
- இடையிடையே நெய் சேர்க்கவும்.
- நெய் பிரிந்து நிறம் மாறி பொங்கிவரும்போது அடுப்பை நிறுத்தி நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறிய பிறகு விருப்பத்திற்கேற்ப வில்லைகள் போடவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக