அதிரசம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 500 கிராம்
வெல்லம் - 400 கிராம்
கச கசா - 3 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 5௦ மி.லிட்டர்
எண்ணெய் - 1/2 லிட்டர்
எள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து மாவாக திரித்து
எடுக்கவும் . மாவு ஈரப்பதமாக இருக்கும் போதே சுக்கு பொடியையும் ,
ஏலக்காய் பொடியையும் சேர்த்து சல்லடையில் சலித்து கசகசாவையும்
அதனுடன் சேர்க்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் 5 ௦ மி .லி தண்ணீர் விட்டு
வெல்லத்தை தட்டி சேர்க்கவும்.தீயை குறைத்து வைத்து வெல்லம்
கரைந்ததும் வடிகட்டி எடுத்துக்கொண்டு மீண்டும் சிறு தீயில் வெல்லப்
பாகு காய்ச்சவும் .பாகு கம்பி பதம் வந்தததும் மாவுடன் எள்ளையும்
சேர்த்து வெள்ளை மாவு இல்லாமல் நன்றாக கலக்கவும்.
எண்ணையை காயவைத்து அதிரசமாவில் சிறுசிறு
உருண்டைகளாக எடுத்து தேவையான அளவில் வட்டமாக தட்டி போட்டு
அதிரசம் செய்து எடுக்கவும் .மிதமான தீயில் மட்டுமே அடுப்பை வைத்து
அதிரசங்களை செய்யவேண்டும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக