செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தயிர் வடை







தேவையான பொருட்கள் :

  1. உளுந்து                         - 1 கப்
  2. இட்லி அரிசி                - 5 டீஸ்பூன்
  3. உப்பு                                - 1 டீஸ்பூன்
  4. தண்ணீர்                        - தேவைகேற்ப
  5. எண்ணெய்                  - 1/2 லிட்டர் 
  6. தயிர்                               -2 கப் 
செய்முறை :
  • உளுந்து அரிசி இரண்டையும் நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பின்பு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அரைக்கவும்.
  • அரைக்கும் போது தேவைகேற்ப பார்த்து, தண்ணீர்,1/2 டீஸ்பூன் உப்பு  சேர்க்கவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் ,1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்து  வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து , எண்ணெய் காய்ந்தவுடன் வடை தட்டி போட்டு ,வெந்ததும்  திருப்பி விட்டு பொன்னிறமாக எடுத்து   கடைந்து வைத்துள்ள தயிரில் சேர்த்து உடனடியாக தட்டை வைத்து மூடவும் .
  • அப்படி செய்தால்தான் வடை தயிரில் சீக்கிரம் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும்.
  • விருப்பமிருந்தால் இனிப்பு புளி சட்னி சேர்த்து ,சாட் மசாலா மேலே தூவி பரிமாறவும்.  

                                                              நன்றி 


             வாழ்வோம் வளமுடன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக