தேவையான பொருட்கள்:
- தக்காளி - 4 பழம்
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- கிராம்பு - 5
- லவங்க பட்டை - சிறிய துண்டு
- பிரிஞ்சி இலை - 2
- சோம்பு -1/2 டீஸ்பூன்
- நெய் - 3 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- அரிசி - 2 கப்
- தண்ணீர் - 3 1/2 கப்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் வதால் பொடி - காரத்திற்கேற்ப
- மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தழை -3 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு லவங்க பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்க்கவேண்டு ம்.
- பெரியவெங்காயத்தை ஸ்லைசா கட் பண்ணி சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் கொஞ்சம் வதங்கினதும் சின்னதா நறுக்கின தக்காளி சேர்க்கவேண்டும்.
- தக்காளி வதகினதுக்கு அப்புறம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.
- அப்புறம் மஞ்சள் பொடி,வத்தல் பொடி ,கரம் மசாலா, உப்பு சேர்த்து கொள்ளவேண்டும்.
- அரிசிய கழுவி குக்கர்ல போட்டு ட்ரை ஆகுரவரைக்கும் வதக்கிட்டு சரியான அளவுல தண்ணீர் ஊற்றி மூடிவைகணும்.
- 3 விசில் அல்லது 1 5 நிமிஷம் மிதமான தீயில வச்சி எடுக்கவும்.
- கொத்தமல்லித்தழையை சின்னதா கட் பண்ணி சாதத்துல கலந்துகொள்ளவும்.
- தயிர் பச்சடியோடு சாப்பிட சூப்பரா இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக