திங்கள், 16 ஏப்ரல், 2018

பாவ் பாஜி

           


தேவையான பொருட்கள் 


  1.  மஞ்சள் பொடி                         -1/2 டீஸ்பூன் 
  2. எண்ணெய்                                - 2 டீஸ்பூன்
  3. காலி பிளவர்                            - 100 கிராம்
  4. கேரட்                                          - 100 கிராம்
  5. உருளைக்கிழங்கு                 -100 கிராம் 
  6. தக்காளி                                     -300 கிராம்
  7. குடை மிளகாய்                       -100 கிராம் 
  8. பச்சை பட்டாணி                   -100 கிராம்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட்         -1/2 டீஸ்பூன்
  10. சாட் மசாலா                            -1/2 டீஸ்பூன்
  11. மிளகாய் வத்தல் பொடி     -1/2 டீஸ்பூன்
  12. சீரகம்                                        -1/2 டீஸ்பூன்
  13. உப்பு                                           -தேவைக்கேற்ப
  14. சீனி                                              -1/4 டீஸ்பூன்
  15. பெரிய வெங்காயம்               -1 
  16. கொத்தமல்லித்தழை            -தேவைக்கேற்ப
  17. பட்டர்                                          -தேவைக்கேற்ப
  18. பாவ் பன்                                     -தேவைக்கேற்ப

செய்முறை:

  • குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு ,சீரகம் பொரிந்தவுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்க்கவும் 
  • பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்,
  • பச்சை வாசனை போன பிறகு சிறிதாக நறுக்கிய தக்காளி, கேரட்,காலி பிளவர்,பச்சை பட்டாணி ,குடை மிளகாய் ,உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும் 
  • பின்பு சிறிதளவு சாட் மசாலா ,வத்தல் பொடி,மஞ்சள் பொடி,கரம் மசாலா ,உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • மிதமான தீயில் சமைக்கவும்.
  • 100 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை  வேகவிடவும்.
  • ஆறியவுடன் குக்கரை திறந்து, மத்து கொண்டு காய்கறிகளை நன்றாக மசித்துவிடவும். 
  • மீதிவுள்ள  சாட் மசாலாவையும் ,சீனியையும்  சேர்க்கவும் .
  • பட்டர் 1/2 டீஸ்பூன் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் .
  • கொத்தமல்லி இலைகளை கழுவி சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • நறுக்கிய வெங்காயத்தின் மீதியை பரிமாறும் போது மேலே தூவவும் .
  • பாவ் பன்னை பட்டர் சேர்த்து டோஸ்ட் செய்து ,பாஜியுடன் சேர்த்து சாப்பிடவும்.
  • இது வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு 

                                                      நன்றி 

                       வாழ்வோம் வளமுடன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக