தேவையான பொருட்கள்:
தினை - 1 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெருங்காயதூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - 2 1/2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரிபருப்பு - 3 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் 2 தேக்கரண்டி நெய் விட்டு சீரகம்,மிளகு ,மஞ்சள் தூள் , பெருங்காய தூள் சேர்க்கவும்.பின்பு சிறிதாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும். தினையையும் பாசிபருப்பையும் கழுவி சேர்க்கவும்.2 நிமிடங்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீரையும் ஊற்றி குக்கரை மூடி வேகவிடவும் .3 விசில் வந்து ஆவி அடங்கிய பின் குக்கரை திறந்து ,நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.கமகம தினை பொங்கல் தயார்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக