திங்கள், 23 ஏப்ரல், 2018

GLASS PAINTING- தமிழ்

                     

                                                                                           



ஹாய் FRIENDS, வாழ்வோம் வளமுடன் 

                                                                நான் ரேவதிசிவகுமார். இன்னைக்கி கிளாஸ்  

பெயிண்டிங்      எப்படி  பண்றதுன்னு பாக்கலாம்.பொதுவா அக்ரலிக் 

பெயிண்டிங்  ,    ஆயில் பெயிண்டிங் இதெல்லாம் FREE HANDல பண்றதால 

தெரியாதவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.BUT கிளாஸ் பெயிண்டிங் அப்படி 

இல்லை. யாரு வேண்ணாலும் பண்ணலாம் .இது ரொம்பவே ஈஸியானது.  

நீங்க உங்க குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் ,உங்க FRIENDS க்கு 

பெயிண்ட் பண்ணி GIFT -டா கொடுக்கலாம்.எல்லாத்தையும் விட, உங்க 

வீட்ல  நீங்களே பெயிண்ட்பண்ணி  வைக்கும்போது  சந்தோஷமா இருக்கும்.


தேவையான பொருட்கள் :


  1.  க்ளாஸ்  போட்டோ பிரேம் -     1 
  2. க்ளாஸ் பெயிண்ட்ஸ்           -      1 பாக்ஸ் 
  3. பெயிண்ட் பிரஷ்                   - NO -01,NO-04(இது தான் அதிகமா யூஸ்ஆகும்)
  4. வொயிட் பேப்பர்                   -     1 
  5. பென்சில்                                  -       1 

எப்டி பெயிண்ட் பண்றதுன்னு பாக்கலாம்.







  • மொதல்ல வொயிட் பேப்பர்ல எந்த படத்த வரைய போறீங்களோ அந்த படத்த   free hand லயோ அல்லது trace பண்ணியோ எடுத்துக்கோங்க .நான் சும்மா சிம்பிளா   free hand ல   வரைஞ்சி இருக்றேன். நீங்க நல்லா பண்ணுங்க.




  • புதுசா வாங்கின போட்டோ பிரேம் ம தெறந்து  ஏற்கனவே இருக்கிற பேப்பர எடுத்துட்டு. கிளாஸ மட்டும் தனியா எடுத்து நாம வரைஞ்ச படத்து மேல வச்சு black colour outline  வரஞ்சிக்கணும்.பெயிண்டிங் பத்தி எதுவுமே தெரியாதுன்னா பெர்மனென்ட் மார்க்கர் வெச்சி கூட நீங்க வரஞ்சுக்கலாம் 





  • அவுட் லைன் வரஞ்சது, நல்லா காஞ்ச  பிறகு தான்,  கலர் பண்ணனும் . நாம பண்ணின  பெயிண்டிங்க ட்ரை ஆகுரவரைக்கும் ஷேக் ஆகாம பாத்துக்கணும் .
  • நல்ல ட்ரை ஆனதுக்கு அப்புறம் போட்டோ பிரேம்ல background செட் பண்ணி பெயிண்டிங்க திருப்பி வைக்கணும்  .


  •  அவ்ளவோ தாங்க நம்ம பெயிண்டிங் ரெடியாயிருச்சி . எத்தன வருஷம் ஆனாலும் அப்டியே இருக்கும்.உங்களுக்கு கிளாஸ் பெயிண்டிங் நல்லா தெரிஞ்சதுன்னா .அடுத்ததா நீங்க செராமிக்,பாட், டேராகோட்டா ,கிளாத் பெயிண்டிங் கூட பண்ணலாம். குழந்தைகளுக்கு நீங்க சொல்லி கொடுக்கிறதா இருந்தா கிளாஸ் மாதிரியே பேப்பர் கிடைக்குது .அத யூஸ் பண்ணலாம்..




                                                           நன்றி 


                                வாழ்வோம் வளமுடன் 

           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக