ஹாய் !
நான் ரேவதி சிவகுமார் .இன்னைக்கு ஈஸியா கோதுமை அல்வா எப்டி பண்றதுன்னு பாக்கலாம்.என்னோட best friend மகாலக்ஷ்மி,marriage ஆகி ரொம்ப வருஷதுக்கு அப்புறம் conceive ஆகி இருக்கிறதால,அவங்களுக்கு ரொம்பவே பிடிச்ச கோதுமை அல்வா செஞ்சிகுடுக்க போறேன். பொதுவா கோதுமை அல்வான்னா சம்பா கோதுமைய வாங்கி ஊறவச்சி மறுநாள் ஆட்டி பால் எடுத்து தான் செய்வாங்க .சத்தியமா ரெண்டு நாள் ஆயிடும்.ஸோ ஈஸியா மூணே மணிநேரத்துல எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு -1 கப்
- சீனி - 2 கப் +2 டேபிள்ஸ்பூன்
- நெய் -1 கப் +2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் -தேவைக்கேற்ப
செய்முறை :
- மொதல்ல கோதுமை மாவ கொஞ்சமா தண்ணீர் விட்டு எவ்ளோ இறுக்கமா பிசைய முடியுமோ அவ்ளோ டைட்டா பிசைஞ்சு ஒரு பாத்திரத்துல போட்டுக்கணும்.
- அடுத்து அது மூழ்கிற அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு மூணு நிமிஷம் அப்டியே விட்ரணும்.
- மூணு நிமிஷத்துக்கு அப்புறமா ரொம்ப ரொம்ப மெதுவா பிசைய ஆரம்பிக்கணும்.
- இப்போ கோதுமைமாவுல இருந்து கோதுமைபால் வர ஆரம்பிக்கும்.
- அந்த பால நாம வடிகட்டி ஒரு பாத்திரத்துல எடுத்து வைக்கணும்.
- அடுப்ப மிதமான தீயில எரியவச்சு ,அடிகனமான பாத்திரத்துல ,எடுத்துவச்ச பால, கலக்கிவிட்டு ஊத்தி கிளறனும்.
- கைவிடாமல்(தொடர்ச்சியாக) கிண்டிட்டே இருக்கணும்.
- தனியா ஒரு பாத்திரத்தில கொஞ்சம் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து ,வதங்கிட்டு இருக்கிற கோதுமை பால்ல சேக்கணும்.
- கோதுமை பால் நல்ல வதங்கின பிறகு தான் 2 கப் சீனி சேக்கணும்.கூடவே ஏலக்காய் பொடியும் சேக்கணும்.
- food color நான் எப்பவுமே use பண்ணமாட்டேன் .உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க சேர்த்துக்கலாம்.
- முந்திரி பருப்பை வறுத்த பாத்திரத்திலையே ,2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு , 2 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நெய்யும் சீனியும் கலக்குமாறு நல்லா மிக்ஸ் பண்ணணும்.
- சீனியும் நெய்யும் சேர்ந்து brown color ஆனபிறகு அல்வால சேர்க்கணும்.இதுவே அல்வாவுக்கு நல்ல கலர் கொடுக்கும்.
- அடுத்து கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்து சேர்த்து கிண்டிகிட்டே ............... இருக்கணும்.
- அல்வா பாத்திரத்துல ஒட்டாம ,நெய் பிரிஞ்சு வந்தபிறகு ,அடுப்பை off பண்ணிட்டு serve பண்ணவேண்டியதுதான்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக