புதினா துவையல்
தேவையான பொருட்கள்:
- புதினா - 1 கட்டு
- தேங்காய் - சிறிய துண்டு
- புளி - நெல்லிக்காயளவு
- எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுந்து - 2 டீஸ்பூன்
- மிளகாய்வத்தல் - 5
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - கால் கப்
- கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்க்கவும்.
- கடுகு வெடித்தபிறகு நறுக்கிய தேங்காய் ,மிளகாய்வத்தல், உப்பு,புளி,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
- புதினாவை நன்றாக கழுவி ஆய்ந்து எதுத்துக்கொள்ளவும்.
- சுத்தம் செய்த புதினாவை வாணலியில் சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கியதும்,ஆறவைத்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
- சுவையான புதினா துவையல் ரெடி .
பயன்கள்:
- புதினா துவையல் இரைப்பைக்கு மிகவும் நல்லது.ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- இரும்பு சத்து ,சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
- எலும்புகள் வலு பெறும்.
- ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
- கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக