ஹாய் friends,வாழ்வோம் வளமுடன்,
நான் ரேவதிசிவகுமார் .இன்னிக்கு நாம சப்ஜா விதைகள பத்தி பாக்கலாம்.இது வேற ஒன்னும் இல்லைங்க ,நம்ம ஊர்லெல்லாம் கிடைக்கிற திருநீற்று பச்சிலையோட விதைகள் தான். இந்தவிதைகள யூஸ்பண்ணி கூல்டிரிங்ஸ்,ஜூஸ், ஸ்மூத்திஸ் பண்ணலாம்.ரெசிப்பி ஒன்னொன்னா நான் என்னோட பேஜ் ல போடுவேன் .இதுல நமக்கு பயனுள்ள நிறையா.......... நல்ல விஷயங்கள் இருக்கு.அத பத்தி இப்போ பாக்கலாம்
- அல்சர் நோய் - க்கு ரொம்பவே நல்ல மருந்தா இது இருக்கும் .
- நம்மளோட உடம்புக்கு குளிர்ச்சி தரும்.
- வயிற்றுக்கும்,குடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
- வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம் இதெல்லாம் சரியாக்கும்.
- இத நீங்க தொடர்ந்து சாப்ட்டு வந்தா கண் எரிச்சல் நீங்கும் ( குறிப்பா சிஸ்டம் வொர்க் பண்றவங்களுக்கு).
- நெஞ்சு எரிச்சலுக்கு நல்ல மருந்தா இது இருக்கும்.
- விரதம் இருந்தாலோ,சாப்படாம இருந்தாலோ ஹைட்ரோ குளோரிக் ஆசிட் னால வர பிரச்சனைய இத சாப்பிட்டால் தடுக்கலாம்.
- இது நம்ம இரத்தத்தில ஆசிட் அளவ குறைச்சு அல்க்கலைனா மாத்தும்.
- மூல வியாதிக்கு இது நல்ல ஒரு மருந்தா இருக்கும்.
- மஞ்சள் காமாலை நோய் இருந்தா,மத்தியான நேரம் சப்ஜாவிதைய 1/2 டீஸ்பூன் இளநீரில் கலந்து 5 நிமிஷத்துக்கு அப்புறம் குடிச்சா நோயோட பதிப்பு குறையும்.
- பெண்களுக்கு, MENSES TIME வர்ற, அடி வயிற்று வலி குறையும் ,white discharge control பண்ணும்.
கால் கப் தண்ணீர்ல 1/2 டீஸ்பூன் சப்ஜா விதைய போட்டு 5 நிமிஷம் ஊற வச்சி ,சாப்பிடணும்.
ஊற வைக்காம சாப்பிடவே கூடாது.
தண்ணியோட சாப்பிட பிடிக்கலனா ,பால் ,ஜூஸ் கூட போட்டு சாப்பிடலாம் .
உடம்புல அதிக சூடு இருந்தா மட்டும் மதிய நேரத்துல இளநீர் கலந்து குடிக்கலாம்.
இது உடலுக்கு ரொம்பவே குளிர்ச்சி அதனால ஆஸ்துமா,சளி தொந்தரவு இருக்கிறவங்க ப்ளீஸ் இத சாப்டாதீங்க.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக