வியாழன், 12 ஏப்ரல், 2018

இள நரை கருமையாக மாற இயற்கை வழிமுறைகள்

                           இளநரை கருமையாக  மாற            இயற்கை வழிமுறைகள்


இளநரை:


                           இன்றைய அவசரமான வாழ்க்கை முறைகளாலும்,தவறான உணவு பழக்கங்களாலும்,உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் 30 வயதுகளிலேயே சிலருக்கு நரைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட இளநரையை 100% இயற்கை வழியிலேயே கருமையாக மாற்ற முடியும் .அவற்றை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

நரைமுடி கருமையாக மாற தேவையான பொருட்கள்:

            
              1.மருதாணி பொடி                       - தேவையான அளவு 

              2.எலுமிச்சை பழ சாரு                - தேவையான அளவு 


முதலில் மருதாணி பொடியை எலுமிச்சை பழ சாருடன் கலந்து தோசை மாவு பதத்தில் எடுத்து நரைமுடியில் பூச வேண்டும்.அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.இப்போது முடிகள்  அடர் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.மேற்கண்ட கலவையை பூசும் போது முடியில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கவேண்டும்.அடுத்ததாக,



               3.கற்றாளை ஜெல்                       -  தேவையான அளவு 

              4.வைட்டமின் ஈ மாத்திரை      -    2 அல்லது 3 

கற்றாளை ஜெல்லையும் வைட்டமின் ஈ மாத்திரைகளின் எண்ணையையும் கலந்து முடியில் தடவி மஸாஜ் செய்து  3 மணிநேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.முடி நன்றாக உலர்ந்த பிறகு ,

             5 .தேங்காய் எண்ணெய்             -  1 லிட்டர் 

             6 .திரிபலா பொடி                          -  2 ௦ ௦ கிராம் 



தேங்காய் எண்ணையை மிதமாக சூடாக்கி அதில் திரிபலா பொடியை சேர்த்து கலந்து வைக்கவும் .தினமும் இந்த எண்ணையை தலையில் தேய்த்து வரவேண்டும். 




              வாரத்தில் இருமுறை மேற்கூறிய முறைப்படி செய்து வந்தால்,1௦௦% விரைவிலேயே இளநரைமுடிகள் எல்லாம் கருமையாக மாறும்.



                                                        நன்றி 


                                                                       வாழ்வோம் வளமுடன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக