வெள்ளி, 19 அக்டோபர், 2018

Ragi pakoda in tamil /ராகி பக்கோடா / கேழ்வரகு பக்கோடா

                                ராகி பக்கோடா







செய்ய தேவையான பொருட்கள் :

  • கேழ்வரகு மாவு                                - 1 கப்
  • அரிசி மாவு                                          - 1/4 கப் 
  • மிளகாய் தூள்                                     -1/4 டீஸ்பூன்
  • உப்பு                                                         -1/2 டீஸ்பூன்
  • சோம்பு                                                    - 1/2 டீஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம்                       -1/2  கப்
  • கேரட் துருவல்(விரும்பினால்)     -1/2  கப்
  • நறுக்கிய மிளகாய்                               - தேவைகேற்ப
  • கறிவேப்பிலை                                      - தேவைகேற்ப
  • பெருங்காய தூள்                                  -1/4 டீஸ்பூன்
  • தண்ணீர்                                                   - தேவைகேற்ப
  • எண்ணெய்                                               - தேவைகேற்ப

செய்முறை :

  1. கேழ்வரகு மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,உப்பு ,சோம்பு,நறுக்கிய வெங்காயம்,கேரட் துருவல்,நறுக்கிய மிளகாய்,பெருங்காய தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் .
  2. பின்பு தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து பிசையவும் .
  3. பக்கோடா செய்ய தேவையான அளவு எண்ணையை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
  4. பின்பு சூடான எண்ணெயில் இருந்து சிறிது எண்ணெய் எடுத்து பக்கோடா மாவில் சேர்த்து கொழுக்கட்டை மாவு போல பிசைந்துகொண்டு , எண்ணையில் சிறிது சிறிதாக மாவை எடுத்து  போட்டு பொரிக்கவும்..
  5. பின்பு பக்கோடா பொரிந்தபிறகு எடுத்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக