டெரகோட்டா ஜுவெல்ஸ் :
டெரகோட்டா ஜுவெல்ஸ்சை பொறுத்தவரை பெண்கள் அணிகின்ற எல்லாவிதமான உடைகளுக்கும் ஏற்ற வகையில் மிகவும் பொருத்தமான டிசைன்களில் நகைகளை செய்யமுடியும்.உதாரணமாக ,
கருநீல நிற துணியில் கோல்டன் கலர் பாடர் வைத்த சுடிதாருக்கு மிகவும் சுலபமான முறையில் நகைகள் செய்வதை வீடியோவில் பார்க்கலாம். இதைப் போலவே நீங்களும் ஈசியாக டெரகோட்டா நகைகள் வீட்டிலேயே செய்து உபயோகிக்கலாம் .
செய்முறை:
- தேவையான அளவு களிமண்ணை எடுத்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்
- சமமான அளவில் ஒரே சீராக தேய்த்து விரும்பிய டிசைனில் வெட்டிஎடுத்துக்கொள்ளவும்.
- தண்ணீரை பிரஷ்ஷில் தொட்டு அழகாக ,கீறல்,வெடிப்பு இல்லாதவாறு சமப்படுத்திக்கொள்ளவேண்டும்
- பின்பு பேனா ரீபில் கொண்டோ அல்லது டெரகோட்டா கிட் உபயோகித்தோ அல்லது கத்தி,குண்டுபின்,பென்சில் இவற்றில் ஏதாவது கொண்டோ விரும்பியபடி டிசைன் செய்துகொள்ளவும்.
- களிமண் டிசைன் ஈராமாக இருக்கும்போதே மாலையாக கோர்க்க தேவையான துளைகள் இட்டுக்கொள்ளவும்
- களிமண்ணை ஒரே அளவாக எடுத்து விருப்பத்திற்கேற்ப மணிகள் செய்து அவற்றிலும் துளைகள் இட்டுக்கொள்ளவும்.அதேபோல கம்மலுக்கும் டிஸைன்செய்து கொள்ளவும்
- செய்து வைத்த மணிகளும்,பெண்ட்டெண்டும்,கம்மலும் காய்ந்தபிறகு விருப்பப்பட்ட வண்ணம் தீட்டலாம்
- வண்ணங்கள் காய்ந்த பிறகு நூல் அல்லது கோல்டன் கலர் கம்பியில் கோர்த்து அணியலாம்
- கம்மலை கம்மல் பேஸில் ஒட்டவைத்தும் ,ஹூக் ட்ராப் போல தொங்கவிட்டும் உபயோகிக்கலாம்
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக