டெரகோட்டா ஜுவெல்ஸ்- ஒரு பார்வை
டெரகோட்டா ஜுவெல்ஸ் என்பது சாதாரணமாக
கிடைக்க கூடிய களிமண்ணை , சுத்தப்படுத்தி அதிலிருந்து எடுத்த மிகமிக
மென்மையான களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் நகைகளாகும்.
இவைகளை நமது கற்பனைக்கு ஏற்றார்போல் மிகவும் அழகாகவும்,
உடைகளுக்கு தகுந்தவாறும் ஏற்ற வண்ணங்கள் கொடுத்து செய்யலாம்.
காற்றில் உலரும் களிமண் :
மேற்கண்ட படத்தில் நீங்கள் காண்பது காற்றில் உலரும் களிமண்.இவைகள் சாதாரணமாகவே கடைகளில் கிடைக்கும்.இந்த காற்றில் உலரும் களிமண்ணில் நகைகள்,பொம்மைகள் செய்து உபயோகிக்கலாம்.முதன் முதலில் நகைகள் செய்து பழக இவைகளே சிறந்தது.விலையும் குறைவு.புதிதாக டெரகோட்டா நகைகள் செய்ய கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்றது.இது காற்றிலேயே உலர்ந்து விடுவதால்.நெருப்பில் சுட்டு எடுக்க தேவையில்லை .காய்ந்த உடனேயே விருப்பப்பட்ட நிறங்களை பூசி உபயோகிக்கலாம்.
நன்றாக கற்றுக்கொண்ட பிறகு டெரகோட்டா களிமண் வாங்கி செய்யலாம்.டெரகோட்டா களிமண் விலை கொஞ்சம் அதிகம்.இதில் நகை செய்யும் போது நன்கு உலரவைத்து நெருப்பில் சுட்டு எடுக்கவேண்டும்.இந்த களிமண்ணை பெரிய கடைகளிலும்,ஆன்லைனிலும் வாங்கலாம். சாதாரணமாக கிடைக்ககூடிய களிமண்ணை டெரகோட்டா களிமண்ணாக மாற்ற பொறுமையும்,நேரமும் இருந்தால் நீங்கள் சாதாரண களிமண்ணிலேயே நகைகளை செய்து பயன்படுத்தலாம்.
வண்ணங்களும் பிற பொருட்களும்:
நகைகள் செய்து முடித்தபிறகு வண்ணங்கள் தீட்ட ப்ரஷ்கள் அவசியம். அக்ரலிக் கலர்ஸ்,செராமிக் கலர்ஸ் உபயோகிக்கலாம்.அக்ரலிக் கலர்ஸிலும் மெட்டாலிக், பேர்ல் கலர்ஸ் கிடைக்கிறது.இவற்றை உபயோகிக்கும்போது நகைகள் மிகவும் அழகாக இருக்கும்.நகைகளில் கலர் நன்றாக காய்ந்த பிறகு லேசாக ஆளிவிதை எண்ணெய் பூசி உபயோகிக்கலாம்.
நகைகள் செய்வது உங்களது கற்பனையை பொறுத்ததுதான். எனவே முதலில் நகைகள் செய்ய, டிசைன்களுக்காக சிறு குழந்தைகளின் வளையல்,காலியான பேனா ரீபில்,குண்டு பின்,ஸ்பூன் இது போல சில பொருட்களை உபயோகிக்கலாம்.இல்லையென்றால் டெரகோட்டா கிட் வாங்கியும் செய்யலாம்.
இவைதவிர கம்மல் பேஸ்,நெக்லஸ் ரோப்,மெட்டல் வயர்,கட்டர், அனபேண்ட் இவைகளும் கூடவே கொஞ்சம் பொறுமையும்,ஆர்வமும் , கற்பனை திறனும் மிகவும் அவசியம்.இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக எப்படி செய்வது என செய்முறை விளக்கத்தோடு பதிவு செய்கிறேன்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக