வெள்ளி, 18 மே, 2018

சூர்ய நமஸ்காரம் - VAAZHVOAM VALAMUDAN

               

                   

சூர்ய நமஸ்காரம்
                
                "ஓம் அஸ்வத் வஜாய  வித்மஹே
                           பாஸ ஹஸ்தாய தீமஹி
                           தந்நோ சூர்ய ப்ரசோதயாத்"
                                                                                                                                                                                 இது  சூர்ய காயத்ரி மந்திரம்.விருப்பமிருந்தால் இம் மந்திரத்தை  சொல்லிக்கொண்டு சூர்ய நமஸ்காரம் செய்யலாம். அவ்வாறு  செய்யும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.இதை மட்டுமே ஒழுங்காக செய்து வந்தால் உடலில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்வதை நீங்களே உணர முடியும். 

 சூர்ய நமஸ்காரம் - நன்மைகள்:

  • கண்களுக்கு மிகவும் நல்லது.
  • உடலில் உள்ள தேவையற்ற சதைகள் மறைந்து அழகான உடலமைப்பை பெறலாம்
  • ஒரே சூர்யநமஸ்காரத்தில் எட்டு விதமான யோகாசனங்கள் இருப்பதால் இதை செய்யும் போது பல நோய்கள் குணமாகும்.
  • இரத்த ஓட்டத்தை சீராக்கும்
  • தைராய்டு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து இதை  செய்து வந்தால்    நல்ல மாற்றத்தை காணலாம்.
  • LDL அதிகம் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கெட்ட கொழுப்பு  படிப்படியாக குறையும்.
  • வயிறு,தொடை,கழுத்து  பகுதிகளில் இருக்கும் கொழுப்பு முற்றிலுமாக குறையும்.    
  • பெண்களுக்கு மிகமிக நல்லது.       
செய்முறை :
  1. முதலில் தரையில் ஒரு மேட்டை விரித்து , சாதாரணமாக  நின்றுகொண்டு கிழக்கு திசை நோக்கி சூரியனை வணங்க வேண்டும். (பிராணமாசனம்)
  2. இரண்டு கைகளையும் மேலே தூக்கி கழுத்தையும்,முதுகையும் பின்னோக்கி வளைத்து ,மூச்சை உள் இழுக்க வேண்டும்.(ஹஸ்த்த உட்டாசனம்)
  3. மூச்சை வெளியேற்றி கொண்டே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் .முழங்கால் மடங்க கூடாது .முடிந்தவரை தலையால் முழங்காலை தொட முயற்சிக்க வேண்டும்.(ஹஸ்த்த பாதாசனம்)
  4. மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே தரையில் கைகளை பதித்து இடது காலை பின்னோக்கி நகர்த்தி,வலது காலை மார்புக்கு நேராக மடக்கிவைத்து தலையை முடிந்தவரை உயர்த்தி மேலாக பார்க்க வேண்டும்.(அஷ்வ சஞ்சலானசனம்)
  5. இரண்டு கால்களையும் பின்னோக்கி நகர்த்தி இரண்டு கைகளையும் தரையில் பதித்து,தண்டால் எடுப்பது போல செய்யவேண்டும் .(தந்தாசனம்)
  6. இடுப்பு பகுதியை மேலே உயர்த்தியும், கைகள், நெற்றி,  தாடை, முழங்கால்கள்,பாத விரல்கள் , ஆகிய உடல் பாகங்கள் தரையை தொட்டுக்கொண்டும் இருக்க வேண்டும்.(அஷ்ட்டாங்காசனம்)
  7. மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை நீட்டி கைகளை முன்னே வைத்துகொண்டு தலையிலிருந்து இடுப்பு வரை நன்றாக பின்னோக்கி வளைக்க வேண்டும். பாம்பு படம் எடுப்பது போல .(புஜங்காசனம்)      
  8.   கைகளையும்,கால்விரல்களையும் மட்டும் தரையில் பதித்து முக்கோணவடிவில்,நின்று தலையை கவிழ்த்தியவாறு மூச்சை    வெளியேற்றவும்.(அதோ  முக்கா ஸ்வானாசனம் )
  9. பிறகு  மீண்டும் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே தரையில் கைகளை பதித்து இடது காலை பின்னோக்கி நகர்த்தி,வலது காலை மார்புக்கு நேராக மடக்கிவைத்து தலையை முடிந்தவரை உயர்த்தி மேலாக பார்க்க வேண்டும்.(அஷ்வ சஞ்சலானசனம்)
  10.  மூச்சை வெளியேற்றி கொண்டே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் .முழங்கால் மடங்க கூடாது .முடிந்தவரை தலையால் முழங்காலை தொட முயற்சிக்க வேண்டும்.(ஹஸ்த்த பாதாசனம்)
  11.   இரண்டு கைகளையும் மேலே தூக்கி கழுத்தையும்,முதுகையும் வளைக்க வேண்டும்.மூச்சை உள் இழுக்க வேண்டும்.(ஹஸ்த்த உட்டாசனம்)
  12. பின்பு சாதாரணமாக  நிற்கவேண்டும் .   மீண்டும் முதலில் இருந்து செய்ய வேண்டும் .
                                                                                                                                                                     குறிப்பு ;
  • காலை வேளையில் செய்வது சிறப்பாக இருக்கும்.
  • மாலை வேளையிலும் செய்யலாம்.
  • வெறும் வயிற்றில் செய்வது நல்ல பலனளிக்கும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் ,சிறு குழந்தைகள் சூரிய நமஸ்காரம் செய்வதை  தவிர்க்கலாம்.


                                                       நன்றி 


                      வாழ்வோம் வளமுடன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக