சேமியா பால் பாயாசம்
தேவையான பொருட்கள்:
- சேமியா -1 கப்
- கொதிக்கவைத்த பால் -1 கப்
- தண்ணீர் -1 கப்
- சீனி -3/4 கப்
- உடைத்த முந்திரிபருப்பு -7
- நெய் - 4 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி -1 டீஸ்பூன்
- கண்டென்ஸ் மில்க் - 100 கிராம்
செய்முறை:
- ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி அதில் நெய் சேர்க்கவும் ,நெய் சூடேறிய பின் அதில் உடைத்த முந்திரிபருப்புகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அதே பாத்திரத்தில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அதே பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்,நீர் கொதித்ததும் அதில் வறுத்து எடுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும்.
- நெருப்பை மிதமாக வைத்து ஒரு 5 நிமிடம் சேமியாவை வேகவிடவும் ,சேமியா வெந்தவுடன் ,அதில் கொதிக்கவைத்து எடுத்த பாலையும் சீனியையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
- பின்பு கண்டென்ஸ் மில்க்கையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும் .
- சேமியா பாயாசம் ரெடி ஆன பின்பு வறுத்து எடுத்து வைத்த முந்திரிபருப்புகளை சேர்த்து ,சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக