f
தேவையானபொருட்கள்:
- மாங்காய் இஞ்சி -200 கிராம்
- கடுகு -1/2 +1/4 டீஸ்பூன்
- வெந்தயம் -1/4 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் பொடி -1 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சை ஜூஸ் -1 1/2 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயப்பொடி -1/2 டீஸ்பூன்
- கருவேப்பிலை - 4 to 6
- உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை
- மாங்கா இஞ்சியை தோலை சீவி ,நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும்.
- 1/4 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தை கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் ஆக்கி கொள்ளவும்
- கடாயை அடுப்பில் வைத்து,கடாய் சூடானவுடன் அதில் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானவுடன்,அதில் கடுகு சேர்க்கவும் ,கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் நறுக்கி வைத்த மாங்க இஞ்சி யை சேர்க்கவும்.
- பின்னர் உப்பு,சிவப்பு மிளகாய் வத்தல் பொடி,பெருங்காய பொடி,கடுகு மற்றும் வெந்தயபொடி ,சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- பின்பு எலுமிச்சை ஜூசை சேர்க்கவேண்டும்
- 5 நிமிடங்களுக்கு பிறகு கறிவேப்பிலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
- விருப்பமிருந்தால் கால் டீஸ்பூன் சீனி சேர்க்கலாம் .
- அதிகமாக செய்து உபயோகிக்க வேண்டுமென்றால் 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து செய்யலாம்.இதனால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும் .
நன்றி
வாழ்வோம் வளமுடன்
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக