புதன், 30 மே, 2018

Paneer butter masala - REVAS COOKING RECIPES

                     

Ingredients:

  1. Paneer                                    - 200 gram
  2. Butter                                    - 1 teaspoon
  3. Chopped onion                       - 3/4 cup
  4. Cardamom                              - 2 pc
  5. Cinnamon                              - small pc
  6. Cloves                                     - 3 to 4 pc
  7. Cashew nuts                            -10 to 15 pc
  8. Garlic cloves                           - 4 pc
  9. Ginger                                     -small pc
  10. Chopped tomatoes                  - 1 cup
  11. Oil                                           - 2 tsp
  12. Kashmiri red chilli powder    - 1 1/2 teaspoon
  13. Sugar                                       - 1 pinch
  14. Coriander leaves                     -as you need
  15. Turmeric powder                    - 1/2 teaspoon
  16. Salt                                         - as you need
  17. Garam masala                        - 1/2 teaspoon
  18. Kasuri methi                         - 1/2 teaspoon
  19. Water                                     - as you need

Procedure:
  • Take one pan add oil and make it heat,once oil becomes hot add cardamom,cloves,cinnamon and saute it.

  • Then we have to add chopped onions,garlic and gingers one by one and fry it properly.


  • Now add cashew nuts and fry it,then add chopped tomatoes,after few seconds add salt, red chilli powder and turmeric powder one by one.

  • Cook it well and take it out, after becomes normal temperature,put it in blender and crush it properly add little bit of water.

  • Take one filter and filtered it the puree and kept it in one bowl.
                                                    

  • Take the pan and add 1/2 teaspoon butter and make it heat once butter melted add the masala puree and make it boiled.
                                              

  • Now add 1/2 teaspoon of garam masala and kasuri methi
                                  
  • Finally add the paneer and mix it well,if you like add one pinch of sugar(optional) and mix it well
                                                    
  • Once everything cooked remove the cravy from the pan and pour it in one bowl add 1/4 teaspoon of butter and chopped coriander leaves.

  • Now our paneer butter masala gravy is ready to serve
                                       





Thanks

VAAZHVOAM VALAMUDAN




திங்கள், 28 மே, 2018

APPLE KESARI in tamil - Revas cooking recipes

                     


                           

தேவையான பொருட்கள் :

  1. ரவை                                                     - 1 கப்
  2. சீனி                                                        - 1 1/2 கப்
  3. முந்திரிபருப்பு                                  -10 
  4. ஏலக்காய் பொடி                             -1/2 டீஸ்பூன் 
  5. நெய்                                                    - 3 டீஸ்பூன் 
  6. நறுக்கி வைத்த ஆப்பிள்             - 1 கப்
  7. தண்ணீர்                                            - 2 கப் 

செய்முறை:
  • அடி கனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு உடைத்து வைத்த முந்திரிபருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொளளவும்.
  • அதே பாத்திரத்தில் 1/2 டீஸ்பூன் நெய் விட்டு நறுக்கி வைத்த ஆப்பிள் பழங்களை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும் .
  • மீண்டும் அதே பாத்திரத்தில் 1/2 டீஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அதே பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்தவுடன் வறுத்து வைத்த ரவையை சேர்த்து நன்றாக கட்டி சேராமல் கிளறிவிட்டு பாத்திரத்தை நன்றாக மூடி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்,
  • பின்னர் வதக்கி வைத்த ஆப்பிள் துண்டுகளையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
  • பின்பு சீனி சேர்த்து நன்றாக கலந்து விடவும்,சீனி நன்றாக கலந்தவுடன் வறுத்து வைத்த முந்திரிபருப்புகளை சேர்த்து கிளறி விட்டு மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்
  • அருமையான ஆப்பிள் கேசரி தயார்.

                                                         நன்றி

               வாழ்வோம் வளமுடன் 


     

வியாழன், 24 மே, 2018

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

                       

                           f

தேவையானபொருட்கள்:

  1. மாங்காய் இஞ்சி                         -200 கிராம்
  2. கடுகு                                             -1/2 +1/4 டீஸ்பூன்
  3. வெந்தயம்                                 -1/4 டீஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் பொடி      -1 1/2 டீஸ்பூன்
  5. எண்ணெய்                               -2 டேபிள்ஸ்பூன்
  6. எலுமிச்சை ஜூஸ்                -1 1/2 டேபிள்ஸ்பூன்
  7. பெருங்காயப்பொடி            -1/2 டீஸ்பூன்
  8. கருவேப்பிலை                      - 4 to 6 
  9. உப்பு                                            - 2 டீஸ்பூன்
செய்முறை
  • மாங்கா இஞ்சியை தோலை சீவி ,நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும்.
  • 1/4 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தை கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் ஆக்கி கொள்ளவும்
  • கடாயை அடுப்பில் வைத்து,கடாய் சூடானவுடன் அதில் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானவுடன்,அதில் கடுகு சேர்க்கவும் ,கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் நறுக்கி வைத்த மாங்க இஞ்சி யை சேர்க்கவும். 
  • பின்னர் உப்பு,சிவப்பு மிளகாய் வத்தல் பொடி,பெருங்காய பொடி,கடுகு மற்றும் வெந்தயபொடி ,சேர்த்து நன்றாக கிளறிவிடவும் 
  • பின்பு எலுமிச்சை ஜூசை சேர்க்கவேண்டும்
  • 5 நிமிடங்களுக்கு பிறகு கறிவேப்பிலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • விருப்பமிருந்தால் கால் டீஸ்பூன் சீனி சேர்க்கலாம் .
  • அதிகமாக செய்து உபயோகிக்க வேண்டுமென்றால் 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து செய்யலாம்.இதனால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும் .

                                      நன்றி 


                    வாழ்வோம் வளமுடன் 



ஞாயிறு, 20 மே, 2018

வெள்ளை மஞ்சள் - பூலாங்கிழங்கு







வெள்ளை மஞ்சள் - பூலாங்கிழங்கு:

                           பூலாங்கிழங்கு என அழைக்கப்படும்  வெள்ளை மஞ்சள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இது பல நல்ல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது . வெள்ளை மஞ்சள், கசப்பு சுவை கொண்டது. தற்போது இதன் பயன்பாடு மக்களிடத்தில் குறைந்து விட்டதால் சிறு நினைவூட்டலுக்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பயன்கள் :

  1. வெள்ளை மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகும் ,எனவே தான் பெண்கள் , குழந்தைகள் குளியல் பொடியில் வாசனைக்காகவும், உடல் நலத்திற் காகவும் இதனை பயன்படுத்தினார்கள்.
  2. தோல்நோய்களுக்கு மிக மிக நல்ல மருந்தாக இது இருக்கிறது
  3. வெள்ளை மஞ்சளை நீரில் இட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து பருகி வந்தால் வயிற்று புண் சரியாகும்.
  4. இது இஞ்சி ,மஞ்சள் இரண்டின் மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  5. குளியல் பொடியாக கஸ்தூரி மஞ்சளையும், பாசிபருப்பையும், பூலாங்கிழங்கையும் சேர்த்து அரைத்து உபயோகிக்கும் போது,தோல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் ஆகிறது.
  6. பூலாங்கிழங்குடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிவந்தால், கரும்புள்ளிகள்,பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
  7. வெள்ளை மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து  முகத்தில் தடவி, காய்ந்தபின் கழுவி வந்தால்  முகத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி அழகாகும் .
  8. முட்டையின் வெள்ளை கருவுடன் இதை பொடிசெய்து கலந்து  முகத்தில் தடவி காய்ந்தபின் குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து இளமையான  தோற்றத்தை பெறலாம்.
  9. பெண்கள் தினமும் இதை குளியல் பொடியில் சேர்த்து குளித்து வந்தால் உடலில் நறுமணம் கமழும்,வாசனை திரவியங்களே தேவையில்லை .
  10. இது வெட்டு காயங்களுக்கும்,தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கும் நல்ல மருந்தாகி,தழும்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது .
  11. முன்பு பேறுகால நேரத்திலும் ,மாதவிடாய் காலத்திலும் பெண்கள் தவறாமல் இதை பயன்படுத்தினார்கள்.
  12. வெள்ளை மஞ்சளை தேநீராக செய்து அருந்தினால் கர்ப்பப்பை இறக்கம்,கட்டிகள்,முறையற்ற மாதவிடாய்  கோளாறுகள் சரியாகும்.
(இதனை சாப்பிடும் போது பாகற்காய்,அசைவ உணவுகள்,நல்லெண்ணெய் தவிர்க்க வேண்டும்)




                                                        நன்றி

            வாழ்வோம் வளமுடன்

வெள்ளி, 18 மே, 2018

சூர்ய நமஸ்காரம் - VAAZHVOAM VALAMUDAN

               

                   

சூர்ய நமஸ்காரம்
                
                "ஓம் அஸ்வத் வஜாய  வித்மஹே
                           பாஸ ஹஸ்தாய தீமஹி
                           தந்நோ சூர்ய ப்ரசோதயாத்"
                                                                                                                                                                                 இது  சூர்ய காயத்ரி மந்திரம்.விருப்பமிருந்தால் இம் மந்திரத்தை  சொல்லிக்கொண்டு சூர்ய நமஸ்காரம் செய்யலாம். அவ்வாறு  செய்யும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.இதை மட்டுமே ஒழுங்காக செய்து வந்தால் உடலில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்வதை நீங்களே உணர முடியும். 

 சூர்ய நமஸ்காரம் - நன்மைகள்:

  • கண்களுக்கு மிகவும் நல்லது.
  • உடலில் உள்ள தேவையற்ற சதைகள் மறைந்து அழகான உடலமைப்பை பெறலாம்
  • ஒரே சூர்யநமஸ்காரத்தில் எட்டு விதமான யோகாசனங்கள் இருப்பதால் இதை செய்யும் போது பல நோய்கள் குணமாகும்.
  • இரத்த ஓட்டத்தை சீராக்கும்
  • தைராய்டு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து இதை  செய்து வந்தால்    நல்ல மாற்றத்தை காணலாம்.
  • LDL அதிகம் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கெட்ட கொழுப்பு  படிப்படியாக குறையும்.
  • வயிறு,தொடை,கழுத்து  பகுதிகளில் இருக்கும் கொழுப்பு முற்றிலுமாக குறையும்.    
  • பெண்களுக்கு மிகமிக நல்லது.       
செய்முறை :
  1. முதலில் தரையில் ஒரு மேட்டை விரித்து , சாதாரணமாக  நின்றுகொண்டு கிழக்கு திசை நோக்கி சூரியனை வணங்க வேண்டும். (பிராணமாசனம்)
  2. இரண்டு கைகளையும் மேலே தூக்கி கழுத்தையும்,முதுகையும் பின்னோக்கி வளைத்து ,மூச்சை உள் இழுக்க வேண்டும்.(ஹஸ்த்த உட்டாசனம்)
  3. மூச்சை வெளியேற்றி கொண்டே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் .முழங்கால் மடங்க கூடாது .முடிந்தவரை தலையால் முழங்காலை தொட முயற்சிக்க வேண்டும்.(ஹஸ்த்த பாதாசனம்)
  4. மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே தரையில் கைகளை பதித்து இடது காலை பின்னோக்கி நகர்த்தி,வலது காலை மார்புக்கு நேராக மடக்கிவைத்து தலையை முடிந்தவரை உயர்த்தி மேலாக பார்க்க வேண்டும்.(அஷ்வ சஞ்சலானசனம்)
  5. இரண்டு கால்களையும் பின்னோக்கி நகர்த்தி இரண்டு கைகளையும் தரையில் பதித்து,தண்டால் எடுப்பது போல செய்யவேண்டும் .(தந்தாசனம்)
  6. இடுப்பு பகுதியை மேலே உயர்த்தியும், கைகள், நெற்றி,  தாடை, முழங்கால்கள்,பாத விரல்கள் , ஆகிய உடல் பாகங்கள் தரையை தொட்டுக்கொண்டும் இருக்க வேண்டும்.(அஷ்ட்டாங்காசனம்)
  7. மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை நீட்டி கைகளை முன்னே வைத்துகொண்டு தலையிலிருந்து இடுப்பு வரை நன்றாக பின்னோக்கி வளைக்க வேண்டும். பாம்பு படம் எடுப்பது போல .(புஜங்காசனம்)      
  8.   கைகளையும்,கால்விரல்களையும் மட்டும் தரையில் பதித்து முக்கோணவடிவில்,நின்று தலையை கவிழ்த்தியவாறு மூச்சை    வெளியேற்றவும்.(அதோ  முக்கா ஸ்வானாசனம் )
  9. பிறகு  மீண்டும் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே தரையில் கைகளை பதித்து இடது காலை பின்னோக்கி நகர்த்தி,வலது காலை மார்புக்கு நேராக மடக்கிவைத்து தலையை முடிந்தவரை உயர்த்தி மேலாக பார்க்க வேண்டும்.(அஷ்வ சஞ்சலானசனம்)
  10.  மூச்சை வெளியேற்றி கொண்டே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் .முழங்கால் மடங்க கூடாது .முடிந்தவரை தலையால் முழங்காலை தொட முயற்சிக்க வேண்டும்.(ஹஸ்த்த பாதாசனம்)
  11.   இரண்டு கைகளையும் மேலே தூக்கி கழுத்தையும்,முதுகையும் வளைக்க வேண்டும்.மூச்சை உள் இழுக்க வேண்டும்.(ஹஸ்த்த உட்டாசனம்)
  12. பின்பு சாதாரணமாக  நிற்கவேண்டும் .   மீண்டும் முதலில் இருந்து செய்ய வேண்டும் .
                                                                                                                                                                     குறிப்பு ;
  • காலை வேளையில் செய்வது சிறப்பாக இருக்கும்.
  • மாலை வேளையிலும் செய்யலாம்.
  • வெறும் வயிற்றில் செய்வது நல்ல பலனளிக்கும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் ,சிறு குழந்தைகள் சூரிய நமஸ்காரம் செய்வதை  தவிர்க்கலாம்.


                                                       நன்றி 


                      வாழ்வோம் வளமுடன்


வியாழன், 17 மே, 2018

சேமியா பால் பாயாசம்

   
                                                          சேமியா பால் பாயாசம்


                   
                       


தேவையான பொருட்கள்:

  1. சேமியா                                     -1 கப்
  2. கொதிக்கவைத்த பால்     -1 கப்
  3. தண்ணீர்                                   -1 கப்
  4. சீனி                                            -3/4 கப்
  5. உடைத்த முந்திரிபருப்பு  -7 
  6. நெய்                                         - 4 டீஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி                -1 டீஸ்பூன்
  8. கண்டென்ஸ் மில்க்         - 100 கிராம்

செய்முறை:
  • ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி அதில் நெய் சேர்க்கவும் ,நெய் சூடேறிய பின் அதில் உடைத்த முந்திரிபருப்புகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அதே பாத்திரத்தில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அதே பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்,நீர் கொதித்ததும் அதில் வறுத்து எடுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும்.
  • நெருப்பை மிதமாக வைத்து  ஒரு 5 நிமிடம் சேமியாவை வேகவிடவும் ,சேமியா வெந்தவுடன் ,அதில் கொதிக்கவைத்து எடுத்த பாலையும் சீனியையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
  • பின்பு கண்டென்ஸ் மில்க்கையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும் .
  • சேமியா பாயாசம் ரெடி ஆன பின்பு வறுத்து எடுத்து வைத்த முந்திரிபருப்புகளை சேர்த்து ,சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.


                                           நன்றி

             வாழ்வோம் வளமுடன்

வெள்ளி, 11 மே, 2018

டெரகோட்டா ஜுவெல்ஸ்



                                

டெரகோட்டா ஜுவெல்ஸ் : 


                                         டெரகோட்டா ஜுவெல்ஸ்சை பொறுத்தவரை பெண்கள் அணிகின்ற எல்லாவிதமான உடைகளுக்கும் ஏற்ற வகையில்  மிகவும் பொருத்தமான டிசைன்களில் நகைகளை செய்யமுடியும்.உதாரணமாக ,





கருநீல நிற துணியில் கோல்டன் கலர் பாடர் வைத்த சுடிதாருக்கு மிகவும் சுலபமான முறையில் நகைகள் செய்வதை வீடியோவில் பார்க்கலாம். இதைப் போலவே நீங்களும் ஈசியாக டெரகோட்டா நகைகள் வீட்டிலேயே  செய்து உபயோகிக்கலாம் .

செய்முறை:

  • தேவையான அளவு களிமண்ணை எடுத்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்
  • சமமான அளவில் ஒரே சீராக தேய்த்து விரும்பிய டிசைனில் வெட்டிஎடுத்துக்கொள்ளவும்.
  • தண்ணீரை பிரஷ்ஷில் தொட்டு அழகாக ,கீறல்,வெடிப்பு இல்லாதவாறு  சமப்படுத்திக்கொள்ளவேண்டும்
  • பின்பு பேனா ரீபில் கொண்டோ அல்லது டெரகோட்டா கிட் உபயோகித்தோ அல்லது கத்தி,குண்டுபின்,பென்சில் இவற்றில் ஏதாவது கொண்டோ விரும்பியபடி டிசைன் செய்துகொள்ளவும்.
  • களிமண் டிசைன் ஈராமாக இருக்கும்போதே மாலையாக கோர்க்க தேவையான துளைகள் இட்டுக்கொள்ளவும்
  • களிமண்ணை ஒரே அளவாக எடுத்து விருப்பத்திற்கேற்ப மணிகள் செய்து அவற்றிலும் துளைகள் இட்டுக்கொள்ளவும்.அதேபோல கம்மலுக்கும் டிஸைன்செய்து கொள்ளவும்
  • செய்து வைத்த மணிகளும்,பெண்ட்டெண்டும்,கம்மலும் காய்ந்தபிறகு விருப்பப்பட்ட வண்ணம் தீட்டலாம்
  • வண்ணங்கள் காய்ந்த பிறகு நூல் அல்லது கோல்டன் கலர் கம்பியில் கோர்த்து அணியலாம்
  • கம்மலை கம்மல் பேஸில்  ஒட்டவைத்தும் ,ஹூக் ட்ராப்  போல தொங்கவிட்டும் உபயோகிக்கலாம் 



                                                                   நன்றி 



                                  வாழ்வோம் வளமுடன்







வியாழன், 10 மே, 2018

டெரகோட்டா ஜுவெல்ஸ்-ஒரு பார்வை

                                       





டெரகோட்டா ஜுவெல்ஸ்- ஒரு பார்வை


                                           
                                              டெரகோட்டா ஜுவெல்ஸ் என்பது சாதாரணமாக 

கிடைக்க கூடிய களிமண்ணை , சுத்தப்படுத்தி   அதிலிருந்து  எடுத்த   மிகமிக 

மென்மையான  களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் நகைகளாகும். 

இவைகளை நமது கற்பனைக்கு ஏற்றார்போல் மிகவும் அழகாகவும், 

உடைகளுக்கு தகுந்தவாறும் ஏற்ற வண்ணங்கள் கொடுத்து செய்யலாம்.




காற்றில் உலரும் களிமண் :








மேற்கண்ட படத்தில் நீங்கள் காண்பது காற்றில் உலரும் களிமண்.இவைகள் சாதாரணமாகவே கடைகளில் கிடைக்கும்.இந்த காற்றில் உலரும் களிமண்ணில் நகைகள்,பொம்மைகள்  செய்து உபயோகிக்கலாம்.முதன் முதலில் நகைகள் செய்து  பழக  இவைகளே சிறந்தது.விலையும் குறைவு.புதிதாக டெரகோட்டா நகைகள் செய்ய கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்றது.இது காற்றிலேயே உலர்ந்து விடுவதால்.நெருப்பில் சுட்டு எடுக்க தேவையில்லை .காய்ந்த உடனேயே விருப்பப்பட்ட நிறங்களை பூசி உபயோகிக்கலாம்.

                          நன்றாக கற்றுக்கொண்ட பிறகு டெரகோட்டா களிமண் வாங்கி செய்யலாம்.டெரகோட்டா களிமண் விலை கொஞ்சம் அதிகம்.இதில் நகை செய்யும் போது நன்கு உலரவைத்து நெருப்பில் சுட்டு எடுக்கவேண்டும்.இந்த களிமண்ணை பெரிய கடைகளிலும்,ஆன்லைனிலும் வாங்கலாம். சாதாரணமாக கிடைக்ககூடிய களிமண்ணை டெரகோட்டா களிமண்ணாக மாற்ற பொறுமையும்,நேரமும் இருந்தால் நீங்கள் சாதாரண களிமண்ணிலேயே நகைகளை செய்து பயன்படுத்தலாம்.

வண்ணங்களும் பிற பொருட்களும்:




                                  நகைகள் செய்து முடித்தபிறகு வண்ணங்கள் தீட்ட ப்ரஷ்கள் அவசியம்.  அக்ரலிக் கலர்ஸ்,செராமிக் கலர்ஸ் உபயோகிக்கலாம்.அக்ரலிக் கலர்ஸிலும் மெட்டாலிக், பேர்ல் கலர்ஸ் கிடைக்கிறது.இவற்றை உபயோகிக்கும்போது நகைகள் மிகவும் அழகாக இருக்கும்.நகைகளில் கலர் நன்றாக காய்ந்த பிறகு லேசாக ஆளிவிதை எண்ணெய் பூசி உபயோகிக்கலாம்.

                             நகைகள் செய்வது உங்களது கற்பனையை பொறுத்ததுதான். எனவே முதலில் நகைகள் செய்ய, டிசைன்களுக்காக சிறு குழந்தைகளின் வளையல்,காலியான பேனா ரீபில்,குண்டு பின்,ஸ்பூன் இது போல சில  பொருட்களை உபயோகிக்கலாம்.இல்லையென்றால் டெரகோட்டா கிட் வாங்கியும் செய்யலாம்.

                      இவைதவிர கம்மல் பேஸ்,நெக்லஸ் ரோப்,மெட்டல் வயர்,கட்டர், அனபேண்ட் இவைகளும் கூடவே கொஞ்சம் பொறுமையும்,ஆர்வமும் , கற்பனை திறனும்  மிகவும் அவசியம்.இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக எப்படி செய்வது என செய்முறை விளக்கத்தோடு  பதிவு செய்கிறேன்.


                                                              நன்றி 


                           வாழ்வோம் வளமுடன்  




செவ்வாய், 1 மே, 2018

குலாப்ஜாமூன்














ஹாய் FRIENDS , வாழ்வோம் வளமுடன்,


                           இன்னைக்கு குலாப்ஜாமூன் எப்படி செய்றதுன்னு பாக்கலாம். 

இப்பெல்லாம் குலாப்ஜாமூன் செய்றதுனாலே ரெடிமிக்ஸா, கடைல வாங்கி 

ஈஸியா செஞ்சிடறாங்க. ஆனா நான் எப்பவுமே  ரெடிமிக்ஸ்  குலாப்ஜாமூன்  

பவுடர் வாங்கமாட்டேன்.ஏன்னா அதவிட நான் வீட்ல பண்ற குலாப்ஜாமூன் 

ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.இத எப்படி செய்றதுன்னு இப்போ பாக்கலாம் .
தேவையான பொருட்கள் :


  1. பால் பவுடர்                     - 1 கப்
  2. சீனி                                     - 1 கப்
  3. ஏலக்காய் பொடி           -கால்  டீஸ்பூன்
  4. பேக்கிங்பவுடர்              -1/2 டீஸ்பூன்
  5. ரவை                                  -2 டீஸ்பூன்
  6. மைதா                                - கால் கப்
  7. ஆயில் (OR) நெய்            - தேவைக்கேற்ப
  8. வெந்நீர்                             - 1/2 கப் 
  9. திக் க்ரீம் (அ) கோவா  - 1 ௦ ௦ கிராம் 
செய்முறை :

  • 1/2 கப் வெந்நீர் ல 2 டீஸ்பூன் ரவைய ஊற வைக்கணும்.
  • 1 கப் சீனிய, 1 கப் தண்ணீர்ல சீனி பாகு செஞ்சி ஏலக்காய் பொடி சேர்த்து தனியா எடுத்துக்கணும்.(ரோஸ் எஸன்ஸ்,குங்குமபூ வேணும்னாலும் சேர்த்துக்கலாம்).
  • பால் பவுடர்,பேக்கிங்பவுடர்,மைதாவ ஜலிச்சி எடுத்து வெந்நீர்  ல இருந்து வடிகட்டின ரவையையும் சேர்த்து நல்ல கலந்து விடணும்.
  • அடுத்ததா அதுல திக்கான கிரீமையும் சேர்த்து ஸ்மூத்தா பிசைஞ்சி எடுத்து ,சின்னச் சின்னதா அழகான உருண்டைகளா செஞ்சி நெய்லையோ அல்லது எண்ணைலையோ கோல்டன் கலர்ல பொறிச்சி எடுத்து சீனி பாகுல சேர்க்கணும்.
  • சீனி பாகுல நல்லா ஊறின பிறகு தனியா பாத்திரத்தில எடுத்து மாத்தி வைக்கணும் .
  • அவ்ளோதான் சூப்பரான குலாப்ஜாமூன் ரெடி. 

குறிப்பு :
  • மிதமான தீயில தான் இத செய்யணும்.இல்லனா உள்ள வேகாமலும் வெளில பிரவுன் கலராவும் ஆயிரும்.








                                                                     நன்றி 



                                 வாழ்வோம் வளமுடன் 


.