திங்கள், 16 ஏப்ரல், 2018

REMEDY OF MUSTACHE GRAY HAIR

'

INGREDIENTS:

  1. Vitamin E capsules  ------ 2 pc
  2. Aloevera gel            ------ 2 teaspoon
procedure:
  1. Take a clean and try bowl.
  2. Add 2 teaspoon of Aloevera Gel.
  3. Carefully cut the vitamin E capsules.
  4. Add over on the Aloevera gel.
  5. Mix it well.
  6. It will looking like pure white colour.
  7. Take that paste and apply in your mustache and massage gently.
  8. Suitable time for apply this one, before go to bed for sleep.
  9. This remedy 100% result will give .
  10. weekly three times you should apply this and check the changes.(Sunday,Tuesday,Thursday)
  11. If any doubt please ask us.

                                            thank you,

                          vaazhvoam valamudan 



மீசை நரைமுடி கருமையாக


                       






தேவையான பொருட்கள்:


  1.  கற்றாளை ஜெல்                       -  2 டீஸ்பூன்
  2.  விட்டமின் ஈ மாத்திரை         - 2    



செய்முறை :
  • 2  விட்டமின் ஈ மாத்திரையை கவனமாக கட்பண்ணி உள்ளே இருக்கும் எண்ணையை  ஒரு கிண்ணத்தில் விடவும்.
  • பின்பு அதில் 2 டீஸ்பூன் கற்றாளை  ஜெல்லை சேர்க்கவும். 
  • கண்ணடி போல இருக்கும் கற்றாளை ஜெல்லை விட்டமின் ஈ எண்ணையோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கலவை வெள்ளை  கலராக மாறியபின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மீசையின் மீது அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
  • இரவு தூங்குவதற்கு முன்பு  இதை செய்யவும் .
  • இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள்,ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்துவர மீசையின் வெள்ளை நரைமுடி கருமையாக மாறும்
  • 100% பலன் தரும்,
  • நம்பி செய்யுங்க நரைமுடிய நீக்குங்க      
                                                      நன்றி
                     வாழ்வோம் வளமுடன் 

சேமியாஉப்புமா




தேவையான பொருட்கள்:



  1.   சேமியா                                    - 1 கப்
  2. கடுகு                                            - 1/4 டீஸ்பூன்
  3. உளுந்து                                      - 1/2 டீஸ்பூன்          
  4. நிலக்கடலை                            - 1 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு                                                - தேவைகேற்ப
  6. நறுக்கிய வெங்காயம்          - 2 டீஸ்பூன் அளவு
  7. பச்சைமிளகாய்                         - 2  
  8. கொத்தமல்லி தழை               - தேவைகேற்ப
  9. கறிவேப்பிலை                          - 2 ஆர்க்கு 
  10. எண்ணெய்                                   - 3 டீஸ்பூன்
  11. தண்ணீர்                                         - 1 1/2 கப் 
  12. மஞ்சள்தூள்                                 - 1/4டீஸ்பூன்

செய்முறை :  
  • வெறும்  பாத்திரத்தில் சேமியாவை போட்டு நன்றாக சிவக்க வறுத்து தனியாக தட்டில் கொட்டி வைக்கவும்.
  • பின்பு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும் .
  • மீண்டும் அதே பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து சேர்த்து, கடுகு வெடித்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும்,1 1/2 கப் தண்ணீரை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்க்க வேண்டும்
  • தண்ணீர் கொதித்த பிறகு தட்டில் இருக்கும் சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி  3 நிமிடம் மூடி வைக்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைக்கவேண்டும்.
  • உப்புமா வெந்த பிறகு ,சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
  • இறுதியாக வறுத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு

  1.  விருப்பப்பட்டால் நறுக்கிய கேரட்,பீன்சை வெங்காயத்தோடு                     வதக்கி செய்யலாம் .
  2. காரத்திற்கு பச்சைமிளகாய்க்கு பதில் வத்தலோ.வத்தல்                              பொடியோ, விருப்பத்திற்கேற்ப  சேர்க்கலாம்.
  3. கரம் மசாலா 1/4 டீஸ்பூன் சேர்த்து செய்தால் வாசனையாக                          இருக்கும்.
                                  


                                                                   நன்றி 


                                 வாழ்வோம் வளமுடன் 
         
  •         

அட்சய திருதியை


           அட்சய திருதியை 18-04-2018
  • சித்திரை அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் வருவது அட்சய திருதியை.
  • திரேதாயுக தொடக்கத்திற்கு அட்சய திருதியையே முதல் நாளாக கிருஷ்ணர் தேர்வு செய்ததாக புராணங்கள் கூறுகிறது .
  • கிருஷ்ணர் பரசுராமராக அவதரித்ததும் இதே நாளில் தான். 
  • தீர்தங்கரர்களில் ஒருவரான ரிஷப தேவர் நினைவாக இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
  • வேத வியாசர் சொல்ல, விநாயகர் மகாபாரதத்தை அட்சய திருதியை நாளில் எழுதியதாக செய்திகள் உண்டு.
  • இதே நாளில் கங்கை நதி பூமிக்கு வந்ததாகவும் போற்றப்படுகிறது.
  • வங்காளத்தில் "அல்கதா"எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
  • வட இந்தியாவில் மஹாலட்சுமி பூஜை .குபேரபூஜை செய்ய ஏற்ற நாளாக கொண்டாட படுகிறது
                                        
நாம் செய்ய வேண்டியது:
  1. மஞ்சள் ,கல் உப்பு,பால்,பால் பொருட்கள்,பச்சரிசி,விசிறி,தானிய வகைகள் வாங்கினால் மிகவும் நல்லது.
  2. பணமிருந்தால் செல்வத்தின் அடையாளமான தங்கம் ,வெள்ளி பொருட்கள் வாங்கலாம்.(இதை கடன் வங்கி செய்தல் தவறு)
  3. மாற்றுத்திறனாளிகள்,ஆதரவற்றோர் ,ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவி செய்தால் புண்ணியம் சேரும்.
  4. வேத பாராயணம்,உபன்யாசகம் செய்ய உகந்தநாள்.
  5. இந்நாளில் புது நோட்டில் வரவு செலவு கணக்கு எழுத தொடங்க, செல்வம் சேரும் என்பது வட இந்தியர்களின் நம்பிக்கை.
  6. துடைப்பத்தில் மகாலக்ஷ்மி இருப்பதாக ஐதீகம்.எனவே புது துடைப்பம் வாங்குதல் நலம்.
  7. பசுவிற்கு வாழை பழம் தருவது சிறப்பு.
  8. தயிர் அன்னம் தானமாக தந்தால் மிகமிக நல்லது.
  9. பச்சை கற்பூரம் ,இனிப்பு வகைகள் ,துளசி செடி வீட்டிற்கு வாங்கினால் நல்லது.

சுருக்கமாக சொன்னால் "அட்சய" என்றால் வளர்ச்சி அல்லது  குறையாத என்று பொருள்.இந்நாளில் எதை செய்கிறோமோ அதுவே வளரும்.முடிந்த வரை அன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும்.



                                                       நன்றி 


                வாழ்வோம் வளமுடன்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

தயிர் பச்சடி


தேவையான பொருட்கள்:
  1. தயிர்                                      - 1 கப்
  2. பெரிய வெங்காயம்      - 1 
  3. வெள்ளரிக்காய்              - 1 
  4. தக்காளி                              - 1 
  5. பச்சை மிளகாய்              - 1 
  6. கேரட்   துருவல்               - 1 டீஸ்பூன்
  7. கொத்தமல்லி தழை     - சிறிது 
  8. உப்பு                                       - தேவைக்கேற்ப
செய்முறை :

  • தக்காளி,வெள்ளரிக்காய்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து சின்னச்சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கி உப்பு சேர்த்து 3 நிமிடம்  கலந்து மூடி வைத்தால் வெங்காயம் தண்ணீர் விட்டிருக்கும்.
  •  தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு அதோடு  நறுக்கிய தக்காளி,வெள்ளரிக்காய் கேரட் துருவல்,கொத்தமல்லி தழை,பச்சைமிளகாய் இவற்றுடன் தயிர் கலந்து பரிமாறவும்.
  • இது பிரியாணி,தக்காளி சாதம்,புலாவ் வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்.




                                                           நன்றி 

                               வாழ்வோம் வளமுடன்


ரவா தோசை

தேவையான பொருட்கள்:
  1. வறுக்காத ரவை                                   - 1 கப் 
  2. உப்பு                                                           - 1 டீஸ்பூன்
  3. உளுந்து                                                    - 1/ 4 கப்
செய்முறை :
  • உளுந்தை கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • வருக்காத ரவையையும்  கழுவி 1 ௦ நிமிடம் மட்டும் வெந்நீரில்  ஊறவைக்கவும்.
  • பின்பு உளுந்து ,ரவை இரண்டையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • நன்றாக அரைத்தபின் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
  • குறைந்தது 7 மணிநேரமாவது புளித்தபின் தோசை கல்லில் மெல்லிசாக மொரு மொருவென தோசை வார்க்கவும்.
  • விருப்பத்திற்கேற்ப தோசை  மேல் நெய்யோ,எண்ணையோ விட்டு திருப்பி எடுக்கவும்.
  • சட்னியோடு  சேர்த்து சாப்பிட  ருசியாக இருக்கும்.



                                            நன்றி 


                       வாழ்வோம் வளமுடன் 






            


                   








பொடுகு பிரச்னை தீர

பொடுகு பிரச்னை தீர

தேவையான பொருள்கள்:

  1. ஆப்பிள் சிடர் வினிகர்----2 டீஸ்பூன்
  • இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை தலையில் அப்ளை பண்ணி நன்றாக மசாஜ் செய்து,கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்,
  • தொடர்ச்சியாக ஒரு வாரம் இதே போல் செய்யவும்.
  • வினிகர் இல்லையே என்பவர்கள் ,வீட்டில் மோர் இருந்தால் ,அதை மட்டும் தலையில் அப் ளை செய்து மேற்கூறியவாறு  குளிக்கலாம்.
  • சாதம் வடித்த கஞ்சியுடன் லெமன் ஜூஸ் சேர்த்து  தலையில் அப்பளை செய்து  மேற்கூறியவாறு குளிக்கலாம்.
  • ட்ரை பண்ணுங்க 

                                               நன்றி

                       வாழ்வோம் வளமுடன் 

தக்காளி சாதம்





   தேவையான பொருட்கள்:     

  1. தக்காளி                                 - 4 பழம்   
  2. பெரிய வெங்காயம்          - 1 
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட்      - 1/2 டீஸ்பூன்
  4. கிராம்பு                                     - 5 
  5. லவங்க பட்டை                     - சிறிய துண்டு
  6. பிரிஞ்சி இலை                       -  2 
  7. சோம்பு                                       -1/2 டீஸ்பூன்
  8. நெய்                                             - 3 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு                                              - தேவைகேற்ப
  10. அரிசி                                             - 2 கப்                       
  11. தண்ணீர்                                      - 3 1/2 கப்
  12. கரம் மசாலா                              - 1/2 டீஸ்பூன்
  13. மிளகாய் வதால் பொடி        - காரத்திற்கேற்ப
  14. மஞ்சள் பொடி                            - 1/2 டீஸ்பூன்
  15. கொத்தமல்லி தழை               -3 டேபிள்ஸ்பூன்                                                                                                                                                                                          

செய்முறை
  • குக்கரில் 3  டேபிள்ஸ்பூன் நெய் விட்டு லவங்க பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்க்கவேண்டு ம்.
  • பெரியவெங்காயத்தை ஸ்லைசா கட் பண்ணி சேர்த்து வதக்க வேண்டும்.
  •  வெங்காயம் கொஞ்சம் வதங்கினதும் சின்னதா நறுக்கின தக்காளி சேர்க்கவேண்டும்.
  • தக்காளி வதகினதுக்கு அப்புறம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.
  • அப்புறம் மஞ்சள் பொடி,வத்தல் பொடி ,கரம் மசாலா, உப்பு சேர்த்து கொள்ளவேண்டும்.
  • அரிசிய கழுவி குக்கர்ல போட்டு ட்ரை ஆகுரவரைக்கும் வதக்கிட்டு சரியான அளவுல   தண்ணீர் ஊற்றி மூடிவைகணும்.
  • 3 விசில் அல்லது 1 5 நிமிஷம் மிதமான தீயில வச்சி எடுக்கவும்.
  • கொத்தமல்லித்தழையை சின்னதா கட் பண்ணி சாதத்துல கலந்துகொள்ளவும்.
  • தயிர் பச்சடியோடு சாப்பிட சூப்பரா இருக்கும்
















சுத்தமான தூள் உப்பு செய்முறை

                                                                           
கல்லுப்பு 




  •  கல்லுப்பு 1 கிலோவை எடுத்து அடிகனமான  இரும்பு பாத்திரத்துல போட்டு மிதமான தீயில  வச்சு நல்லா  வருத்துக்கணும் .
  • வறுத்த உப்பை நல்லா ஆறவைக்கணும்.
  • அப்புறமா மிக்சில போட்டு அரைச்சு எடுத்து வைக்கணும்.
  • அவ்ளோதான்! சூப்பரான தூள் உப்பு ரெடி.
  • கல்லுப்ப வறுக்காமல் அரைச்சா அதுல இருக்கிற ஈரப்பதத்தால உப்பு கட்டி கட்டியா ஆயிரும்.
  • கிலோ 12 ரூபா கல்லுப்ப, பௌடர் பண்ணி நம்மகிட்ட கிலோ 3 2 ரூபாய்க்கு வித்துகிட்டு இருக்காங்க.(டாட்டா உப்பு)
  • அதுவாது பரவா இல்ல "எங்க உப்புல அயோடின் இருக்கு , எங்க உப்புல சோடியம் இருக்கு"ன்னு விளம்பரத்துல கூவி கூவி வித்துட்டு, நமக்கெல்லாம் தைராய்டுல இருந்து கிட்னி ப்ராப்ளம் வரைக்கும்  வரவச்சுராங்க.
  • ஸோ நாமதான் உஷாரா இருக்கணும்.



                                                             நன்றி 


                                 வாழ்வோம் வளமுடன்

ரவா லட்டு




                                                                ரவாலட்டு 

தேவையானபொருட்கள்:



  1. ரவை                                   -            1 கப்
  2. சீனி                                      -       3/4 கப்
  3. நெய்                                     -      1/2 கப் 
  4. தேங்காய் துருவல்        -      1/2 கப்
  5. முந்திரிபருப்பு                  -      1/2 கப்
  6. ஏலக்காய் பொடி              -      1/2 டீஸ்பூன்

செய்முறை:


  • ரவையை வெறும் பாத்திரத்தில் இட்டு வறுத்துக்கொள்ளவும்.
  • பின்பு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சின்னஞ்சிறு துண்டுக்களாக்கி வறுத்துக்கொள்ளவும்.
  • மீண்டும் 1 டீஸ்பூன்நெய் சேர்த்து தேங்காய் துருவலையும் வறுத்துக்கொள்ளவும்.
  • ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையையும் சீனியையும் ஒன்றாக மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
  •  மீதி உள்ள நெய்யை சூடாக்கி சீனி கலந்த ரவையில் ஊற்றி ஏலக்காய்பொடி,வறுத்த தேங்காய் துருவல்,வறுத்து வைத்த முந்திரி பருப்பு  என அனைத்தையும் கலந்து சூடாக இருக்கும் போதே லட்டு பிடிக்கவும். 
  • சூப்பரான ரவாலட்டு தயார்.


                                                           நன்றி
    


                         வாழ்வோம் வளமுடன் 

ரசகுல்லா

                                        ரஸ குல்லா 




தேவையான பொருட்கள்:


  1. பால்                                        - 1 லிட்டர் 
  2. சீனி                                          - 2 கப்
  3. தண்ணீர்                                 -4 கப்
  4. எலுமிச்சை ஜூஸ்             - 3டீஸ்பூன்
செய்முறை :
  • பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.
  • பால்திரிந்ததும் சுத்தமான மஸ்லின் துணியில் வடிகட்டி பிழிந்தது கோவாவை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • ஆறியவுடன் கோவாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  • குக்கரில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்
  • தண்ணீர் கொதித்தபின் 2 கப் சீனி சேர்த்து கரைத்ததும்  உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக இடவும்.
  • கரண்டியால் கிண்ட கூடாது.தானாகவே மேலே வந்து வேகும் .
  • குக்கரை மூடி விசில் போடாமல் 5 லிருந்து 8 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  • குக்கரை திறந்து விருபத்திற்கேற்ப ஏலக்காய் பொடி,குங்குமபூ சேர்த்து பரிமாறலாம். 

                                                                  நன்றி


                                வாழ்வோம் வளமுடன் 

சனி, 14 ஏப்ரல், 2018

காஜூ கத்லி



 
                                                                 காஜூ கத்லி



தேவையான பொருட்கள்:


  1. முந்திரி பருப்பு                                   - 1/2 கிலோ
  2. பால்                                                        -1 லிட்டர்
  3. சீனி                                                         - 1/2 கிலோ
  4. நெய்                                                        - 2 5 ௦ கிராம்

செய்முறை:  


  • 1/2 லிட்டர் பாலை காய்ச்சவும்.
  • 1/2 கிலோ முந்திரி பருப்பை மீதி உள்ள பாலில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த விழுதை காய்கிற பாலில் கொட்டி வதக்கவும்
  • நன்றாக வதங்கிய பின் சீனிசேர்த்து கிளறவும்
  • இடைஇடையே நெய் சேர்த்து கொள்ளவும்
  • கைவிடாமல் கிளறி பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடவும். 



                                                          நன்றி



                 வாழ்வோம்  வளமுடன் 

மைசூர்பாகு

                                         




                                                        மைசூர் பாகு


தேவையான பொருட்கள்:

  1. கடலைமாவு                                   - 1 கப்
  2. சீனி                                                     - 1 கப்
  3. நெய்                                                    -2 கப்
  4. தண்ணீர்                                            - 1/4 கப்

செய்முறை: 

  • கடலைமாவை மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.
  • பின் 1 கப் நெய் சேர்த்து கடலைமாவை கரைத்துக்கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் சீனியும் தண்ணீரும் சேர்த்து பாகு காய்ச்சவும்.
  • கம்பி பதம் வந்ததும் கரைத்து வைத்த கடலைமாவை ஊற்றி கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • இடையிடையே நெய் சேர்க்கவும்.
  • நெய் பிரிந்து  நிறம் மாறி பொங்கிவரும்போது அடுப்பை நிறுத்தி நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறிய பிறகு  விருப்பத்திற்கேற்ப வில்லைகள் போடவும். 


                                                         நன்றி 


                       வாழ்வோம் வளமுடன் 

                                          

                                               

வால் மிளகு மஞ்சள் பொடி

                        வால் மிளகு மஞ்சள் பொடி

தேவையான பொருட்கள்:

  1. வால் மிளகு                       -    5 ௦ கிராம் 
  2. விரலி மஞ்சள்                  -  5 ௦ கிராம்
  3. பனங்கல்கண்டு              - 2 5 ௦ கிராம்
செய்முறை:

  • வால் மிளகையும் விரலிமஞ்சளையும் நன்றாக காயவைத்து எடுக்கவும்.
  • பிறகு பனங்கல்கண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • இதை காற்றுபுகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
பயன்கள்:
  1.  சளி இருமல் இருக்கும் போது 1 கப் பாலில் 1/2 டீஸ்பூன் போட்டு சூடாக குடித்தால் குணமாகும்.
  2. நெஞ்சுச்சளி ,தலை பாரம் சரியாகும்.
  3. யார்வேண்டுமானாலும் தேவைகேற்ப சாப்பிடலாம்.
  4. பக்கவிளைவுகள் கிடையாது.
  5. குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுக்கலாம்.

                                                                      நன்றி

                             வாழ்வோம் வளமுடன் 

சீயக்காய் தூள்




                                            சீயக்காய் தூள் 

தேவையான பொருட்கள்:

  1. சீயக்காய்                             - 1 கிலோ
  2. வெந்தயம்                           - 3 ௦ ௦ கிராம்
  3. பாசிபருப்பு                           - 3 ௦ ௦ கிராம்
  4. பூந்தி கொட்டை                - 3 ௦ ௦ கிராம்
  5. ரோஜா இதழ்                      -1 ௦ ௦ கிராம்
  6. எலுமிச்சைதோல்            - 5 ௦ கிராம்
  7. காய்ந்த செம்பருத்தி பூ  - 1 ௦ ௦ கிராம் 

செய்முறை:


           மேற்கண்ட பொருட்களை 1 வாரம் வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.இதை தலைக்கு குளிக்கும் போது கரைத்து தேய்த்து குளித்துவந்தால்,உடல் குளிர்ச்சி பெறும்.நீண்ட கருமையான கூந்தலை பெறலாம்,முடி அடர்த்தியாக வளரும்.

                                  


                                                                   நன்றி 


               வாழ்வோம் வளமுடன்

பாதாம் கீர்

                                           

                                                           பாதாம் கீர் 

தேவையான பொருட்கள்:

  1. பால்                                     - 1 லி
  2. பாதாம்                                - 1 ௦ ௦ கிராம்
  3. குங்கும பூ                          - 2 சிட்டிகை
  4. ஏலக்காய் பொடி             - 1/2 டீஸ்பூன்
  5. சீனி                                      - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
  1. 1 லிட்டர் பாலை  1/2 லிட்டராக வற்ற காய்ச்ச வேண்டும்.
  2. பாதாம் பருப்பை உறவைத்து,தோல் நீக்கி கரகர வென அரைக்கவும்.
  3. அரைத்த பருப்பை பாலில் சேர்த்து காய்ச்சவும்.
  4. பின்பு சீனி,குங்குமபூ, ஏலக்காய்பொடி சேர்த்து இறக்கவும்.
  5. தயாரான பாதாம் பாலை குளிர்வித்து அருந்தவும்.
                                                            நன்றி 


                         வாழ்வோம் வளமுடன்

நெய் உருண்டை



   

                                                   நெய் உருண்டை 


தேவையான பொருட்கள்:


  1. உளுந்தம் பருப்பு -2 ௦௦ கிராம்.
  2. பாசி பருப்பு            - 2 ௦௦ கிராம்.
  3. சர்க்கரை                 - 3 ௦௦ கிராம்.
  4. நெய்                          - 2 ௦௦ கிராம்
செய்முறை:

  1. உளுந்தம் பருப்பையும்,பாசிபருப்பையும் தனிதனியாக வெறும் பாத்திரத்தில் வறுத்துக்கொள்ளவும்.
  2. வறுத்த பருப்புக்களை ஆறவைத்து,அரைத்துக்கொள்ளவும்.
  3. சர்க்கரையையும் அரைத்து மாவோடு கலந்துகொள்ளவும்.
  4. மிதமான தீயில் நெய்யை சூடாக்கி கலந்து உருண்டை பிடிக்கவும்.
  5. இளம் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் ஏற்ற சுவையான நெய்யுருண்டை தயார்.



                                                                          நன்றி     


                வாழ்வோம் வளமுடன்

அல்சர் குணமாக

                                                      அல்சர் குணமாக 


தவிர்க்கவேண்டியவை:


  1. டீ,காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும்.
  2. அதிக காரம் ,அதிக புளிப்பு சேர்க்க கூடாது.
  3. கோலா ,பெப்ஸி போன்ற பானங்களை குடிக்ககூடாது.
  4. இரவு அதிகநேரம் விழித்திருப்பதை தவிர்க்கவேண்டும்.
  5. பசிக்கும்போது சாப்பிடமுடியாவிட்டால்.தண்ணீரை மட்டுமாவது குடித்துவிடவேண்டும்.
  6. ஊறுகாய்,மோர்வத்தல்,அப்பளம் தவிர்க்க வேண்டும்.
  7. காரமான அசைவ உணவுகளையும்,எண்ணெயில் பொறித்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
செய்ய வேண்டியவை:
  1. இளநீர் குடிக்க வேண்டும்.
  2. வெந்தய களி,உளுந்தங்களி அதிகம் சாப்பிட வேண்டும்.
  3. வாழை பூ,வாழை தண்டு உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
  4. ஆப்பிள்.வாழை,பன்னீர் திராட்ச்சை,மாதுளை போன்ற பழவகைகளை சாப்பிடவேண்டும்.
  5. தூக்கம் மிகவும் அவசியம்.எனவே பாலில் ஜாதிக்காய் பொடி சேர்த்து அருந்தவும்.
  6. தயிர்சாதம்,மோர்சாதம்,பழைய சாதம்,இதில் ஏதாவதை காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
  7. முடிந்தவரை பசித்த உடனேயே சாப்பிட்டுவிட வேண்டும்.



                                                       நன்றி

                              வாழ்வோம் வளமுடன்

புதினா துவையல்



                                                          புதினா துவையல் 


தேவையான பொருட்கள்:


  1.  புதினா                           - 1 கட்டு
  2. தேங்காய்                      - சிறிய துண்டு 
  3. புளி                                    - நெல்லிக்காயளவு
  4. எண்ணெய்                    - 1/2 டீஸ்பூன்
  5. கடுகு                                 - 1/2 டீஸ்பூன்
  6. உளுந்து                           - 2 டீஸ்பூன்
  7. மிளகாய்வத்தல்          - 5 
  8. உப்பு                                    - தேவைக்கேற்ப
  9. தண்ணீர்                           - கால் கப் 
  10. கறிவேப்பிலை              - 2 கொத்து 
   

செய்முறை:

  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்க்கவும்.
  • கடுகு வெடித்தபிறகு நறுக்கிய  தேங்காய் ,மிளகாய்வத்தல், உப்பு,புளி,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
  • புதினாவை நன்றாக கழுவி  ஆய்ந்து எதுத்துக்கொள்ளவும்.
  • சுத்தம் செய்த புதினாவை வாணலியில் சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும்,ஆறவைத்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
  • சுவையான புதினா துவையல் ரெடி .


பயன்கள்:


  1. புதினா துவையல் இரைப்பைக்கு மிகவும் நல்லது.ஜீரண சக்தியை  அதிகரிக்கும்.
  2. இரும்பு சத்து ,சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
  3. எலும்புகள் வலு பெறும்.
  4. ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
  5. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  மிகவும் நல்லது.









                                                                    நன்றி 

                               வாழ்வோம் வளமுடன் 




        

பித்தவெடிப்பு குணமாக

                பித்தவெடிப்பு குணமாக 


தேவையான பொருட்கள் :


  1. கல் உப்பு                           --- ஒரு கைப்பிடி
  2. ஆப்பிள் சிடர் வினிகர் --- 2 டீஸ்பூன்
  3. வெந்நீர்                              --- 1/2 பக்கெட்
  4. விளக்கெண்ணெய்       --- 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் பொடி                 ---4  டீஸ்பூன்

செய்முறை:
  1. பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கல் உப்பும் ஆப்பிள் சிடர் வினிகரும் விட்டு காலை உள்ளே வைத்து ஒரு 10 நிமிடம் இருக்கவும்,பின்பு கால்களை நன்றாக கழுவிவிட்டு விளக்கெண்ணெய்யும் மஞ்சள் பொடியும் கலந்து பித்தவெடிப்பு உள்ள பகுதி முழுவதும் தடவவும்.
  2. தூங்குவதற்கு முன்பு இதை செய்து வந்தால் பித்தவெடிப்பு பூரணமாக குணமாகும்.
  3. தொடர்ச்சியாக ஒரு வாரம் இதே போல்  செய்து வந்தால் ,பொலிவான பாதங்களை பெறலாம்
  4. எந்த ஒரு பக்கவிளைவும் கிடையாது 

                                                           நன்றி

           வாழ்வோம் வளமுடன்